Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Monday, July 23, 2012

ஜாதி சபையின் தீர்ப்பு. பெண் மற்றும் கள்ளக் காதலனை நிர்வாணமாக்கி மரத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தது.


ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோலார் கிராமத்தைச் சேர்ந்த ஜாதி சபை திருமணமான பெண்ணையும், அவரது கள்ளக் காதலனையும் மரத்தில் கட்டி வைத்து அவர்களின் ஆடைகளை அகற்றிவிட்டு அடித்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் உள்ளது கோலார் கிராமம். அந்த கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் மீனா (25). அவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த திருமணமான பெண்ணுக்கும் கள்ளத் தொடர்பு இருந்து வந்தது.
இதையடுத்து அவர்கள் இருவரும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கிராமத்தை விட்டு ஓட்டம் பிடித்தனர். இது குறித்த அறிந்த கிராமத்தினர் அவர்களைத் தேடித் திரிந்தனர்.
ஒரு வழியாக கடந்த சனிக்கிழமை மாலை அவர்களை கண்டுபிடித்து கிராமத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு வந்ததும் ஜாதி சபை கூடியது.
அந்த சபையில் கள்ளக்காதல் ஜோடியை கூடியிருந்த கிராமத்தினர் முன்பு மரத்தில் கட்டி வைத்து, அவர்களை நிர்வாணமாக்கி அடித்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மீது கிராமத்தினர் கற்கள் வீசித் தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து ஒரு போலீஸ் குழு வந்து அந்த இருவரையும் கிராமத்தினரிடம் இருந்து மீட்டது. அந்த கள்ளக்காதல் ஜோடி தற்போது போலீசாரின் பாதுகாப்பில் உள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் ஜாதி சபையினரையும், கிராமத்தினரையும் கைது செய்ய முயன்று வருகின்றனர்.

No comments:

Post a Comment