( எம்.ஏ.அஹ்ஸன் அக்தர்)
காரைதீவு பிரதேச சபை அமர்வு இன்று எதிர்கட்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.பாயிஸ் எழுப்பிய கேள்வியினை தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சையினையினால்
இடை நிறுத்தப்பட்டு மீண்டும் தொடர்நதது.ஏற்கனவே சபை அமர்வொன்றின் போது பிளாஸ்டிக் நொறுக்கும் இயந்திரம் ஒன்றை கொள்வனவு செய்வதற்கான ஏகமனதாக ஒதுக்கப்பட்டிருந்த 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா நிதியினை இயந்திரத்தினை கொள்வனவு செய்யாமல் காரைதீவு தபாலக வீதியினை புனருத்தானம் செய்வதற்காக தன்னிச்சையாக தவிசாளர் பயன்படுத்தியுள்ளார்.
இந்த விடயம் சம்பந்தமாக காரைதீவு பிரதேச சபையின் ஒரேயொரு எதிர்க்கட்சி உறுப்பினரான ஏ. பாயிஸ் சபையில் கேள்வியொன்றினை எழுப்பி இந்த சபை காரைதீவு பிரதேசத்தைச் சேர்ந்த தமிழர்களையும் மாளிகைக்காடு மற்றும் மாவடிப்பள்ளியைச் சேர்ந்த முஸ்லீம்களையும் பிரதிநித்ததுவம் செய்கின்றது. நிதிகள் ஒதுக்கப்படும் போது விகிதாசார அடிப்படையில் நிதிகள் ஒதுக்கப்பட வேண்டும் 60 வீதமான நிதி தமிழ் பிரதேசங்களுக்கு ஒதுக்கப்பட்டால் 40 வீதமான நிதி முஸ்லிம் பிரதேசங்களுக்கும் ஒதுக்கப்பட வேண்டும் . தான் அவ்வாறு கேட்கவில்லை. மூன்றில் ஒரு பகுதி நிதியினை முஸ்லிம் பிரதேசங்களுக்கும் ஒதுக்க வேண்டும் என்று உரையாற்றிக் கொண்டிருக்கும் போது தற்செயலாக மேசையிலிருந்த தண்ணீர் கிளார் கைதட்டுப்பட்டு கீழே விழுந்து உடைந்ததால் தவிசாளர் பிரதேச சபை உறுப்பினர் வன்முறையினை பிரயோகிக்கின்றார் என்று குற்றம் சுமத்தி உடனடியாக பொலிஸ் நடவடிக்கைக்கு உத்தரவிட்டார்.
சற்று நேரத்தில் சம்மாந்துறை பொலிஸார் அந்த இடத்திற்கு வந்து விசாரணை நடாத்திய பின்னர் இதனை உயர் அதிகாரிகளுக்கு அறிக்குமாறு பணித்து சென்றுள்ளனர்.
காரைதீவு பிரதேச சபை தவிசாளர் விகிதாசார நிதி ஓதக்கீட்டினை வழங்காமால் இவ்விடயத்தினை வேறு பக்கம் திசை திருப்புவதற்காக பொலிஸ் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக பிரதேச சபை உறுப்பினர் ஏ. பாயிஸ் தெரிவித்தார்.

No comments:
Post a Comment