Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Monday, July 30, 2012

புத்த சாமியார்களே முஸ்லிம் இன அழிப்பில் மும்முரம் – லண்டன் பத்திரிகை தகவல்

பர்மாவில் புத்த சாமியார்கள் கூட்டுக் கொலைச் செய்யப்படும் முஸ்லிம்களுக்கு வரும் உதவிகளை தடுப்பதாக பிரிட்டிஷ் பத்திரிகையான இண்டிபெண்டண்ட் செய்தி வெளியிட்டுள்ளது. புத்த சாமியார்கள் நேரடியாகவே முஸ்லிம் இன அழித்தொழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள்.

மனிதநேயமான எவ்வித முன்னுரிமையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிக்காமல் அவர்களுக்கு வரும் அனைத்து உதவிகளையும் தடுத்து நிறுத்துகின்றனர். மியான்மரில் சிறுபான்மையினரை வேண்டுமென்றே துடைத்தெறிய புத்த சன்னியாசிகள் திட்டம் தீட்டுகிறார்கள். தற்பொழுது மியான்மரில் நடந்து வரும் அனைத்து கூட்டுப் படுகொலைகள் மற்றும் இன அழித்தொழிப்புகளுக்கும் தலைமை தாங்கி ஊக்கப்படுத்துபவர்கள் புத்த சன்னியாசிகள் தாம் என இண்டிபெண்டண்ட் பத்திரிகை குற்றம் சாட்டுகிறது.

கடந்த தினங்களில் புத்த சாமியார்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அனைத்து வித மனிதநேய உதவிகளையும் தடுத்துள்ளனர். இதனை அவர்கள் அரசின் ஆதரவுடன் நடத்தி வருகின்றனர் என்று அப்பகுதியில் இயங்கும் அர்கான் என்ற மனித உரிமை அமைப்பின் இயக்குநர் கிறிஸ் லியோ கூறுகிறார்.

முஸ்லிம்கள் அபயம் தேடியிருக்கும் முகாம்களை புத்த சாமியார்கள் சுற்றி வளைத்துள்ளனர். அவர்கள் முஸ்லிம்களுக்கு எந்த உதவிகளும் செல்லாமல் தடுத்து வருகின்றனர் என்று கிறிஸ் லியோ கூறுகிறார்.

மியான்மரில் நடந்து வரும் முஸ்லிம் இனப் படுகொலைகள் குறித்து ஜனநாயகத்தின் பாதுகாவலராக இரட்டை வேடம் போடும் ஆங் சான் சூகி மெளனம் சாதித்து வருகிறார். சமாதானத்தின் தூதர்களாக உலகை வலம் வரும் ஆங் சான் சூகியும், தலாய் லாமாவும் இவ்விவகாரத்தில் வேண்டுமென்றே மெளனம் சாதிக்கின்றனர்

No comments:

Post a Comment