Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Tuesday, August 28, 2012

மு.கா.தலைமை பணத்துக்காக சமூகத்தை விற்பதற்கு தயாராகி விட்டது; பைஸர் முஸ்தபா குற்றச்சாட்டு!


MM
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்தை மறந்து இன்றைய தலைமை பணத்துக்காகவும் பதவிக்காகவும் முஸ்லிம் சமூகத்தை விற்பதற்கு தயாராகி விட்டதென்று பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மட்டு. மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும்
வேட்பாளர்களை ஆதரித்து நேற்று முன்தினம் வாழைச்சேனை பிறைந்துறைச்சேனை பிரதேசத்தில் எம்.ஆப்தீன் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
‘முஸ்லிம் காங்கிரஸை ஆரம்பித்த பெருந்தலைவர் அஷ்ரப் எனது தந்தையுடன் மிகவும் நெருக்கமானவர். அவர் கட்சியை ஆரம்பித்து சமூகத்தின் கல்வி வளர்ச்சி, தொழில் வளங்கள், உட்கட்டமைப்பு அபிவிருத்தி என பல அபிவிருத்திகளைச் செய்தார்.
ஆனால் இன்றைய தலைவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைப் பொறுப்பை ஏற்றதன் பின் கட்சியிலிருந்த சமூக சிந்தனையாளர்களை வெளியேற்றினார். அது இன்றும் தொடர்கின்றது.
சமூகத்தை விற்று அரசியல் செய்வது தவறாகும். சமூகத்தின் நலனுக்காகவும் சமூகத்தின் வளர்ச்சிக்காகவும் வேண்டித்தான் அரசியல் செய்ய வேண்டுமே தவிர சமூகத்தை விற்று நம்மை வளர்ப்பதற்காக அரசியல் செய்வது தவறாகும்” என்றும் கூறினார்.

No comments:

Post a Comment