(அல்-மிஸ்பா)
நோன்பு அதன் மாண்பு, எமது உரிமைக் கோலம், இந்த நாடு, எமது இறைமை, சுயாட்;சி, தேர்தல் இவை அனைத்துக்குமுள்ள தத்தளிப்பில் எனது இச் செய்தியை எழுத வேண்டியுள்ளது.
1950களில் ஆரம்பிக்கப்பட்ட இனவாதக் கொள்கை கடந்த 60 வருடங்களாக இழக்க முடியாத ஆயிரம் ஆயிரம்
உயிர்ப் பலிகளையும் பல ஆயிரம் மில்லியன்கள் பெருளாதரங்களையும் காலங்களையும் இழந்தும் அந்த 50களில் இருந்த சுதந்திரம் இன்று இல்லை.
இனிமேலும் வருமா? என்ற கேள்விக்கு ஆம் என்று கூறக்குடிய சூழ்நிலை பிரந்திருக்கிறது. உலக நாடுகளின் அழுத்தங்கள் இன்று பெரும் பான்மை ஆட்சியாளர்கள் மீது விதிக்கப்படுகின்ற விதிகளை நினைத்தால் குறிப்பிட்ட சில காலங்களுக்குள் ஏதோ ஒரு வடிவில் இனப் பிரச்சினைக்கான தீர்வு பிரக்கும் என்பதில் ஒரு நம்பிக்கை உணர்வு பளிச்சுpடுகின்றது. நாம் இந்த நாட்டில் இலங்கை முஸ்லிம்கள் புர்விகமாக அரச ஆட்சிகள் இருந்த காலம் தொட்டு மன்ற ஆட்சிக் காலமான இன்று வரை பொரும்பான்மை சமுகத்துடனும் அதன் ஆட்சியாளர்களுடனும் ஒரு இணக்க அரசியலை செய்து வந்த வரலாற்றுப் பதிவுகள் உள்ளன. ஆனால் எமக்கான விமோசணங்கள் மேம்படுத்தப்பட்டிருக்கின்றதா? அல்லது விழ்ச்சியடைந்து இருக்கின்றதா? என்ற கேள்விக்கு விள்ச்சியடைந்திருக்கின்றது என்பைதைத் தவிர வேரு இல்லை. இதற்க்கான காரணங்களாக மூன்று தர சமூகமாக இந்த நாட்டில் இருப்பது ஒரு காரணம் இன்னும் ஒரு முதன்மையான காரணம் எமது சமுகத் தலைவர்கள் பேரும்பான்மை ஆட்சியாளர்களுக்கு விலை போவதுமாகும். ஒரு வீட்டின் குரல் இரு கருத்துக்களாக இருக்குமானால் அங்கே பிரச்சினைகள் தீர்வதில்லை. அது போலவே எமது சமுகத்தின் குரல் இரண்டு கருத்துக்களாக இருக்குமானால் அங்கேரும் பிரச்சினைகள் தீர்வதில்லை. வழமையாகவே இந்த நாட்டின் முஸ்லிம்களின் அரசியல் தலையிடி ஒரு சரணாகதி அரசியாலாகவே இருந்து வந்து இருக்கிறது. அதனாலேயே இந்த நாட்டின் தீர்வு சம்பந்தமான பேச்சுக்ள் அனைத்திலும் சம தரப்பு தரப்பட வில்லை. அடிமை அரசியலைக் கூறிக் கொள்ளும் தமிழ் தேசியம் முஸ்லிம் தேசியத்தின் தனித்துவத்தை இது வரை உணராமையே சம தரப்பு எமக்கு கிடைக்காமையே காரணமாகும். கடந்த 1½ வருடங்களுக்கு முன்னர் எமக்கு சமதரப்பை தர மருத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று அதனையும் வாரி வழங்கி எம்மை அரவணைக்க அழைப்பது எதற்க்காக? அது போலவே ஆட்சியாளர்கள் கூட எமது முஸ்லிம்; காங்கிரசை அரவணைக்க அழைப்பது எதற்க்காக ஸ்ரீலாங்க முஸ்லிம் காங்கிரஸ்தான் இந்த நாட்டின் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக இன்ஸா அல்லாஹ் எதிர் வரும் 08ம் திகதி மாறப்போகின்றது என்பதுதான் உண்மையாகும். இந்த உண்மையை நிறுவதற்க்காக துடித்த மாதலைவர் அஸ்ரப்பை இழந்து விட்டோம். அவர் எமக்கு காட்டிய 2012 முஸ்லிம்களின் எழுச்சிப் பயணம் எதிர்வு கூறல் உண்மையாகப் போகிறது. இந்த உண்மைகளை எழுதும் கைகளை வாக்காளப் பெறுமக்தான்.
அடிமைத்துவத்திற்க்கு அரியாசணம் அமைப்பதா? ஆல்லது தனித்துவத்ததில் சுயாட்சி அமைப்பதா? அல்லது சரியன நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்காமல் ஒரு பாதாளத்தை நோக்கிப் பயணிப்பதா? அபிவிருத்தி எனும் மாயை கண்ணாடியை எம் கண்களில் இருந்து காலற்றி ஒரு பக்கம் துக்கி எறிந்து விட்டு சிந்தித்தால் எதிர்காலம் சிறக்கும். எமது சிறார்களின் வழமையான வாழ்வு உறுதி செய்யப் படும் இதற்க்கான தேர்வுகள் உங்கள் மனங்கள் எடுத்துறைக்கும் என்ற நல்ல செய்தியை கூறி எனது ஆசிச் செய்தியாக கூறி விடை பெறுகின்றேன்.

No comments:
Post a Comment