Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Saturday, October 27, 2012

ஹாபீஸ் நஸீர் அஹமட் அவர்களின் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து

விட்டுக் கொடுப்பதில் இருந்தே தியாகம் உருவாகிறது. தியாகம் என்பது அன்பின் வெளிப்பாடாகும். நாம் மிகவும் விரும்புகின்றதொன்றை அடுத்தவருக்காக விட்டுக் கொடுக்கும் தியாக குணமானது – மனிதாபிமானத்தின் உச்சமாகும். இப்றாகிம் நபியவர்கள் இறைவனுக்காக தனது அன்பு மகனையே தியாகம்
செய்வதற்குத் துணிந்து நின்ற வரலாறானது, இன்று கொண்டாடிக் கொண்டிருக்கும் ஹஜ்ஜுப் பெரு
நாளினை நமக்கு நினைவூட்டுகின்றது. அடுத்த மனிதனை நேசிப்பதற்கும், சக மனிதனுக்காக விட்டுக் கொடுப்பதற்கும் இந்த ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் நாம் மென்மேலும் உறுதி கொள்ள வேண்டும்’ என்று – கிழக்கு மாகாண விவசாய, கால்நடை அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தனது ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

‘நாம் ஒவ்வொருவரும் அடுத்த மனிதனை நேசிக்கப் பழகிக் கொண்டால், இந்த உலகம் அமைதியடைந்து விடும். சக மனிதனை நேசிக்க முடியாதவர்களால் இறைவனை நேசிக்க முடியாது. அடுத்தவர் மீது நாம் வைக்கும் அதீதமான நேசம்தான் நம்மிடம் தியாக குணத்தை வளப்பதற்கு வழிவகை செய்கிறது.

ஹஜ் என்கிற வரலாறு – நமக்கு வெறும் மார்க்கக் கடமையினை மட்டும் கற்றுத் தரவில்லை. அந்த வரலாற்றில் நமக்குப் படிப்பினையாக ஏறாளமான விடயங்கள் இருக்கின்றன. அவற்றினை நமது வாழ்வில் நடைமுறைப்படுத்துவோமேயானால் – இந்த உலகிலும், மறுவுலகிலும் நமது வாழ்க்கை மகிழ்ச்சியானதாக அமைந்து விடும்.

நமக்கு விருப்பமானவற்றை இறைவனுக்காகவும், சக மனிதனுக்காகவும் தியாகம் செய்யுமாறு இஸ்ஸாம் கூறுகிறது. இன்று நம்மிடையே ஏராளமானோர் வறுமையோடு போராடிக் கொண்டு வாழ்கையைக் கடத்திக் கொண்டிருப்பதை இந்தத் தியாகத் திருநாளில் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அவர்களுக்கு நம்மாலானா உதவிகளைச் செய்வதனூடாக நாம் இறைவனின் பொருத்தத்தைத் தேடிக் கொள்ள வேண்டும்.

ஹஜ்ஜின் போதனைகள் – ஹஜ் பெருநாள் தினத்துக்கு மட்டுமானதல்ல. நமது வாழ்க்கை முழுவதும் அதை நடைமுறைப்படுத்த வேண்டும். அன்பும், தியாகமும் கொண்ட வாழ்க்கையானது மகிழ்ச்சி நிறைந்ததாகும்.

எனவே, இப்றாகிம் நபியவர்களின் தியாகத்தைப் போற்றி நினைவு கூரும் இந்த நாளில், நமக்குள்ளும் அவ்வாறானதொரு தியாக குணத்தை வளர்த்துக் கொள்வதற்கு இன்றைய நாளில் உறுதிகொள்வோம்.

உங்கள் அனைவருக்கும் எனது ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்’

No comments:

Post a Comment