மின்சாரம் தாக்கி குடும்பப் பெண் மரணமாகியுள்ளதாகவும் குறித்த பெண்ணின் பிள்ளைகள் இருவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு – போருதொட்ட பிரதேசத்தில் இன்று பிற்பகல் 1.45 மணியளவில் இச்சம்பவம் இடம் பெறறுள்ளது.
நீர்கொழும்பு போருதொட்ட பிரதேசத்தை சேர்ந்த சீனத்துல் ஜிப்ரியா என்ற 42 வயதுடைய பெண்ணே மின்சாரம் தாக்கி மரணமானவராவார். அவரது பிள்ளைகளான முஹம்மத் மின்னார் (13வயது) மகளான பாத்திமா முனீரா ஆகியோரே காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சிறுவன் வீட்டின் மேல் மாடிக்கு சென்று தொலைக்காட்சி அண்டனாவை வைக்க முயன்றுள்ளான். இதன்போது அண்டனா கம்பி சரிந்து வீட்டின் முன்பாக செல்லும் மின்சார வயர்களின் மேல் விழுந்துள்ளது. இதனை அடுத்து மின்சாரம் தாக்கி சிறுவன் வீசப்பட்டு கீழே விழுந்துள்ளான். இதன்போது சிறுவனின் சகோதரியும் மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
இந்நிலையில் சிறுவனின் தாயார் மகனை காப்பாற்ற ஓடி வந்து தொலைக்காட்சி அண்டனா கம்பியை தொட்டபோது அவர் மீது மின்சாரம் தாக்கியுள்ளது. இந்நிலையில் மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே தாயார் வைத்தியசாலையில் மரணமாகியுள்ளார்.

No comments:
Post a Comment