Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Wednesday, October 24, 2012

சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் செயலிழந்துவிடும் அபாயம்

சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் இன்று இரவு அல்லது நாளை செயலிழந்து விடும் என்று கனியவள தொழில் சங்கங்கள் எச்சரிக்கையுடன்,அச்சம் வெளியிட்டுள்ளன.

எண்ணெய் சுத்திகரிப்புகள் இவ்வாறு
செயலிழக்கின்றமை ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என்று தேசிய சேவையாளர் சங்கத்தின் கனியவள கூட்டுத்தாபனத்தின் கிளை செயலாளர் ஆனந்த
 பாலித்த தெரிவித்துள்ளார்.

அவர் இதுகுறித்து கருத்து வெளியிடுகையில்:

சுத்திகரிப்பதற்கான மசகு எண்ணெய் கொழும்பு துறைமுகத்துக்கு அப்பால் கடல் எல்லைக்குக் கூட வரவில்லை. இதற்கு அமைய எதிர்வரும் இரண்டு மூன்று வாரங்களுக்கு சுத்திகரிப்புப் பணிகளை முன்னெடுக்க முடியாது.

இதனடிப்படையில், மண்ணெண்ணெய் மற்றும் விமானங்களுக்கு உபயோகிக்கும் எரிபொருட்களை 80 சதவீத மேலதிகமாக இறக்குமதி செய்ய வேண்டும். மின் உற்பத்தி மற்றும் தொழிற்சாலைகளுக்கான தொய்வு எண்ணெய் 70 சதவீதம் மேலதிகமாகவும், பெட்ரோல் மற்றும் டீசல் 30 சதவீதம் மேலதிகமாகவும் கொள்வனவே செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கனியவள கூட்டுத்தாபனத்திற்கு நாளாந்தம் 4 கோடி 50 லட்சம் ரூபாவிற்கும் அதிகமான நட்டம் ஏற்படும்.

தேசிய சேவையாளர் சங்கத்தின் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக இலங்கை சுதந்திர சேவையாளர் சங்கத்தின் கனியவளக் கூட்டுத்தாபன கிளையிடம் வினவிய போது, அதன் தலைவர் பந்துல சமன் குமார, எதிர்வரும் இரண்டு தினங்களுக்கு சுத்திகரிப்புக்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் இருப்பதாக தெரிவித்தார்.

இதன் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ளும் நோக்கில், சப்புகஸ்கந்தை சுத்திகரிப்பு நிலையத்தின் முகாமையாளர் நீல் ஜயசேகரவிடம் வினவப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தற்போது கையிருப்பில் உள்ள மசகு எண்ணெய் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு சுத்திகரிப்பதற்கு போதுமானதாக இருக்கும் என பதிலளித்தார்.

எதிர்வரும் காலங்களுக்கான சுத்திகரிப்பிற்கு மசகு எண்ணெய் தேவைகளை நிறைவேற்றுவதற்கு, இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.

எதிர்வரும் இரண்டு வார காலத்திற்கு சபுகஸ்கந்தையில் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டால், அங்கு பணியாற்றும் ஊழியர்களை பராமரிப்பு பணிகளில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாக கனியவள கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment