இலங்கையின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்பதற்காக தம்முடன் ஒன்றிணைந்து செயற்படுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஐக்கிய தேசியக்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் மற்றும் ஜே வி பினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
2013 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றி முடிவுரையின் போது ஜனாதிபதி இந்த அழைப்பை விடுத்தார்.
சர்வதேச மத்தியஸ்தத்தை விட இலங்கையில் உள்ள குறித்த தலைவர்கள், மத்தியில் இருக்கின்ற அனுபவத்தை கொண்டு அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்துக்கொள்ளமுடியும்
எனவே தேசத்தின் பிரச்சினையில் தீர்வுகளை காண ஒன்றிணையுமாறு மஹிந்த ராஜபக்ச எதிர்கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
.jpg)
No comments:
Post a Comment