Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

அரசியல்


-
பர்ஸான் ஏஆர் -
2008 ம் ஆண்டு காத்தான்குடியில் இடம்பெற்ற சமூக, இலக்கிய செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்ட அரங்கில் ஆற்றிய உரையின் தொகுப்பு
அனைவருக்கும் என் சலாத்தை தெரிவித்துக் கொள்கின்றேன். மர்ஹூம் அஷ்ரப் அரங்கினை தொடங்கி வைக்கலாம் என நினைக்கிறேன். இந்த அடிப்படையில், எனக்குப் பொறுப்பாக்கப்பட்ட 1வது அரங்கினை ஆரம்பித்து வைக்கிறேன்.
மர்ஹூம் கலாநிதி எம்.எம்.எம்.அஷ்ரப் அரங்கு. இன்றைய காலகட்டத்தில் அதிகூடிய கௌரவங்களினாலும் புனிதங்களாலும் கட்டமைக்கப்பட்ட ஒரு நபராக என்னைப் பொறுத்தளவில் நான் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களைக் காண்கின்றேன். இந்த உரைக்கான தலைப்புகளை நான் தெரிவு செய்த போது அல்லது அதற்கான புள்ளிகளை, குறிப்புக்களை எடுத்துக்கொண்ட போது அவர் பற்றிய ஒரு பகுதி வாசிப்பு கிடைத்தது. இன்றைய நிலையில், இன்றைய இலங்கை முஸ்லிம்களுக்கிடையிலான அரசியல் கட்சிகளின் பரவலாக்கம் அல்லது இலங்கை அரசியலின் குறிப்பாக சிறுபான்மையினர் மீதான அழுத்தங்களை எல்லாம் வைத்துப் பார்க்கின்ற போது  எம்.எச்.எம். அஷ்ரப் பற்றிய புனிதங்கள் மிக உயர்வாக இச் சமூகத்தில் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இலங்கையின் இனமுரண்பாட்டு அரசியலில் ஒரு மிக முக்கிய கட்டத்தில் எம்.எச்.எம்.அஷ்ரப் என்ற நபர் இலங்கை முஸ்லிம்ளுக்கிடையே அல்லது இலங்கையின் அரசியல் சமூகங்களுக்கிடையே அறிமுகமாகின்றார். இன்னொரு வகையில் அதைக் கூறுவதென்றால் மிக முக்கிய வரலாற்றுக் கட்டத்தில் அஷ்ரபுடைய பிரவேசம் அல்லது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவராகவிருந்த அஷ்ரபுடைய பிரவேசம் இலங்கை அரசியலில் இடம்பெறுகின்றது. அந்த சூழல், அஷ்ரபுடைய அரசியல் பிரவேசத்துக்கான சூழல் இலங்கையைப் பொறுத்தளவில் மூவினங்களுக்கிடையிலான ஒரு பனிப்போர் இடம்பெற்றுக் கொண்டிருந்த அதே சம காலத்தில் ஆயுத வன்முறைகளினால் மூவினங்களும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. குறிப்பாக இந்த இடத்தில் ஒன்றை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாப தலைவர் என்ற அந்தஸ்தினை மர்ஹும் அஷ்ரப்பிற்கு இச் சமூகம் வழங்குகின்றது. ஆனால் உண்மை நிகழ்வு அவ்வாறனதல்ல. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆரம்பமென்பது நாங்கள் இன்று கலந்து கொண்டிருக்கும் இந்த காத்தான்குடி மண்ணுக்குச் சொந்தமானது. இந்தக் காத்தான்குடி மண்ணிலிருந்துதான் ஒரு சமூகவியல் இயக்கமாக, அல்லது ஒரு நற்பணி மன்றமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருந்து கொண்டிருக்கிறது. பின்னர் அஷ்ரப் அவர்கள்  அதனுடன் ஏற்பட்ட தொடர்பின் காரணமாக அதன் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களாக மாறுகின்ற போது அதன் பின்னர் காத்தான்குடியின் மிக முக்கிய புள்ளிகளுக்கிடையேயான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தொடர்புகள் அறுந்து போகின்றன. அந்தக் கட்டத்தில்தான் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அஷ்ரப்பினால் தொடங்கப்பட்டதென்ற ஒரு கலந்துரையாடல் அம்பாறை மாவட்டத்திற்கும் இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கும் பரப்பப்படுகின்றது. ஸ்தாபகத் தலைவர் என்ற பெயரையும் அவர் பெற்றுக் கொள்கின்றார். இலங்கையில் இன முரண்பாட்டில் போராட்டம், போராளி என்ற சொற்கள் மிக முக்கிய விடுதலையின் புள்ளிகளாகவிருந்த காலகட்டங்களில் அஷ்ரப் அவர்களும் அதற்கேற்றது போல் அந்த Technical words ஐ பயன்படுத்துகின்றார். உதாரணமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் அங்கத்தவர்களை போராளிகள் என்ற பாணியிலான அழைப்பு விடுக்கப்படுகின்றது. ஏற்கனவே தமிழியக்கங்களினால் முஸ்லிம்களுடைய நிலவரங்கள் சூரையாடப்பட்டுக் கொண்டிருந்த காலப்பகுதியில் அல்லது தமிழியக்கங்களிலிருந்து முஸ்லிம்கள் விரண்டு கொண்டிருந்த காலப்பகுதிகளில் போராளிகள் என்ற அழைப்பானது  அந்த Technical words ஆனது இலங்கை முஸ்லிம்களுக்கிடையே ஒரு எழுச்சி மிக்க சொற்பிரயோகமாக மாற்றமடைவதை அக் கால கட்டங்களை நாங்கள் Analys பண்ணுகின்ற போது அல்லது மீள்பரிசோதனை செய்கின்ற போது உணர்ந்து கொள்ளலாம். இதே போல்  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் வருடாந்த கூட்டங்கள் செயலாளர் மகாநாடு என்ற பெரும் அரசியல் சொல்லாடலினால் அழைக்கப்படுகின்றது. இந்த சொல்லாடல்கள் விடுதலையின் பாற்பட்டது என்ற ஒரு கருத்து நிலையினை முஸ்லிம் சமுகம் உணர்ந்து கொள்கின்ற ஒரு நிகழ்வு இந்தக் கட்சியினை அல்லது அமைப்பினை மக்களின் உயிரோட்டத்துடன் அவர்களுடைய ரூஹானியத்துடன் இணைக்கின்ற எதிர்பாராத சம்பவத்தினை முஸ்லிம் காங்கிரசிற்கு ஏற்படுத்திக் கொடுக்கிறது.
ஒரு நண்பர் நகைச்சுவையாகச் சொன்னார். ‘கோழைகளை போராளிகளென அழைத்த ஒரே ஒரு சமூகம் முஸ்லிம் சமூகம்’தமிழர்கள் நிச்சயமாக போராடிக் கொண்டிருந்தார்கள் போராளிகள். வாய்த்தர்க்கங்கள், டயர் எரிப்புகள், ஹர்த்தால்கள் போட்டுக் கொண்டிருந்த ஒரு சமூகத்தின் அங்கத்தவர்களை போராளிகளென்ற பெரும் சொற்களினால் அழைத்தோம். அந்தப் போராளிகள் என்ற அழைப்பு அதனுடன் இணைந்தவாறு ஜனரஞ்சகப்படுத்தப்பட்ட கட்சி முஸ்லிம் சமூகத்துள் ஊடுறுவிய முதல் தடவை என்பன ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசிற்காக எங்களுடைய உள்ளங்களையும், வீட்டு வாசற் கதவுகளையும் திறந்து விடச் செய்கின்றன. வேறு எந்த எதிர்பார்ப்புகளும் வேறு எந்த மாற்றுக் கட்சிகளுக்கும் அல்லது எந்த தவிசுகளுக்கும் இடமில்லாமல் அந்தக் கட்சியினை உளமாற ஏற்றுக் கொண்டோம். அந்த கட்சியின் ஸ்தாபக தலைவரைக் கண்டபோது எங்களுடைய அன்புக்குரிய தாய்மார் முக்காட்டைப் போட்டுக் கொண்டனர். இந்த வகையில்தான் சாதாரண ஒரு சட்டத்தரணியாகவிருந்த எம்.எச்.எம். இன் அரசியல் பிரவேசம் நடைபெறுகின்றது. அவருடைய தோழர்களுடனும் இணைந்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசினை வெறுமனே அதன் ஆரம்ப கட்டங்களை அஷ்ரபுடைய அரசியல் சித்தாத்தங்களையும் பார்ப்பதனை தாண்டி அவர்களுடைய தோழர்களது அரசியல் காய் நகாத்தல்கள் சொல்லாடல்கள் யாவற்றையும் பார்க்க முடியும். 88ம் ஆண்டு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசிற்கான தேர்தல் விஞ்ஞாபனத்தினை ஒரு வீதியின் விளக்கிற்கு கீழேயிருந்து ஆபிரகாம் லிங்கனைப் போல இருந்து கொண்டு அமைச்சுர் சேகு இஸ்ஸதீன், பதுருத்தீன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் அஷ்ரப் ஆகிய 3 பேரும்தான் எழுதினார்கள். கொழும்பிலிருக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் கட்சியாக பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் பாஷாவிலா, அந்த இடமே எதுவெனத் தெரியாது. பாஷாவிலா எனும் அந்தப் பெயர் மட்டும் உள்ளங்களை ஆர்ப்பரித்துக் கொண்டது. அதற்கு நாங்கள் ஓரிடம் எடுத்துக்கொண்டோம். ஒரு இனப்போலியல் நடைபெற்றுக்கொண்டிருந்த சமூகங்களிலிருந்து ஜனநாயகத்துக்கான நீரோட்டமாகவும் அல்லது எங்களது குடும்பங்களுக்குள்ளேயிருந்து பார்க்கும் போது ஆயுத வன்முறைகளுக்கு சென்றுவிடுவார்கள் என்று அஞ்சிய பிள்ளைகள் இளைஞர்களை எல்லாம் ஜனநாயக ரிதியில் வழிப்படுத்துகின்ற ஒரு மிகப் பெரிய பயிற்சி கூடமாக அன்றைய 90 காலப்பகுதியில் அல்லது 80களின் ஆரம்ப காலப்பகுpதியிலிருந்து  காலப்பகுதியிலிருந்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற SLMC அறிமுகமாகி வருகின்றது. அதன் சின்னத்துடன் இணைந்து பச்சை நிறம் முஸ்லிம்களுக்கு மிகவும் நெருக்கமான ஒரு நிறம் அதையே எமது தலைவர் தேர்ந்தெடத்துக் கொண்டார். அதே போல மஞ்சள் அல்ல அந்த கோல்ட்டினையும் அவரே தேர்ந்தெடுத்துக் கொண்டார். ஆக பல்வேறு காரணங்களினால் அந்தக் கட்சியும் கட்சியின் தலைமைத்துவமும் ஒரு பிரித்துவிட முடியாத அங்கமாக இடம்பெறுகின்றது. கட்சியின் வளர்ச்சி கால கட்டங்களை எடுத்துப் பார்க்கும் போது அஷ்ரபுடைய பெரு முயற்சி அங்கு இடம்பெற்றிருக்கிறது. ஒரு மிகச்சிறந்த, தர்க்கம் செய்வதில் வல்லவராகவுமிருக்கின்ற கலாநிதி அஷ்ரப் அவர்கள் அன்றைய கால கட்டங்களில் அவரிடமிருந்த விதிதுவமான விடயங்களையெல்லாம் பயன்படுத்திக் கொண்டு அவருயை அரசியல் சித்தாத்தங்களை சமூகத்துக்குள்ளே நடைமுறைப் படுத்தத் தொடங்கினார். ஆரம்பகட்டங்களில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் வளர்ச்சி பெரும் விருட்சமாக வளர்ந்ததோ அவரது ஆரம்ப எதிர்பார்ப்பு இருந்திருக்குமா என்ற எதிர்பார்ப்பு இருந்திருக்குமா என்ற சந்தேகம் வந்திருக்கிறது. ஒரு விடுதலையின் பெயரினால் ஒரு இயக்கம் ஆரம்பிக்கப்படுகின்றது. ஒரு சமூகம் விடுதலைக்காக காத்திருக்கிறது. அந்த விடுதலை இயக்கத்தினை வழிநடாத்தும் தலைவராக அஷ்ரப் எம்முன் அறிமுகமாகின்றார். அவர் அந்த விடுதலைப் போராட்டத்தின் வழிகளை நடாத்துகின்றார். தமிழ் சமூகத்தின் ஆயுத வன்முறையிலிருந்து விலகியிருக் வேண்டும் என்று எதிர்பார்த்த முஸ்லிம் சமூத்திற்கு ஜனநாயகம் தேவைப்படுகின்றது. ஆனால் கால கட்டங்களில் அரசியல் காய் நகர்த்தல்களினால்  தலைவருக்கு ஏற்படுத்தப்படுகின்ற சிறந்த வெளியிடப் போக்குகளின் காரணமாக இந்த இயக்கத்தின் செயற்பாடுகளில் கொஞசம் கொஞ்சமாக மாற்றம் ஏற்படத் தொடங்குகிறது. ஒரு அமைப்பாக்கம் அல்லது இருப்பியல் வாதத்துக்கு இருக்க வேண்டிய பாசிசத் தன்மையினையும் அந்தக் கட்டமைப்பை தொடர்ந்தேச்சையாக கொண்டு செல்வதில் கையாள வேண்டிய இறுக்கமான நிலைமைகளையும் அஷ்ரப் உருவாக்கிக் கொள்கின்றார். அல்லது அந்த புறச்சூழல், அந்த இயக்கத்தினைக் கட்டிக்காக்க வேண்டும் என்ற எண்ணப்பாடு அவரை அவ்வாறான ஒரு தலைவராக மாற்றியமைக்கிறது. இந்த காலகட்டங்களில் 90களைத்தாண்டி 91 ஐ நேக்கி  அஷ்ரபுடைய அரசியலும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசும் பிரவேசிக்கின்றது. கட்சியைக் கட்டிக் காக்க வேண்டிய தேவைகளின் காரணமாக கட்சியினுள் காணப்பட்ட ஜனநாயக முறைமைகளை நீக்குவதில் அஷ்ரப் அவர்கள் மிகவும் கைதேர்ச்சியான விடயத்தை செய்கிறார்கள். கட்சிக்குள்ளிருந்து கட்சியின் தலைமைத்துவம் என்பது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் தலைமைத்துவமாகவும் தலைமைத்துவத்திற்கெதிராக பேச முடியாது என்பதற்காக அல்லது அந்தக் கருத்தைப் பரப்புவதற்காக ஆரம்ப கால இஸ்லாமிய வரலாற்று முறைமைகளும் அங்கு நடந்த நிகழ்வுகளும் கட்சிக்குள்ளே விவாதிக்கப்படுகின்றன. மக்களுக்கு முன்னே பரப்பப்படுகின்றன.
தூதர் முஹம்மத் (ஸல்) அலைஹி வஸல்லம் அவர்களை எவ்வாறு கேள்வி கேட்க முடியாது, அவர்களிடம் எந்த ஸஹாபாக்களும் கேள்விகளை கேட்கவில்லை என்ற நிலைப்பாட்டினை 91க்குப் பின்னர் அல்லது 92ன் ஆரம்பங்களிலிருந்து குறிப்பாக சேகு இஸ்ஸதீனை கட்சியிலிருந்து வெளியேற்றும் நிகழ்விலிருந்து கட்சிக்குள்ளே ஏற்படுத்தப்படுகின்றது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு புனிதத்துவம் வாய்ந்த எவரினாலும் கேட்க முடியாத மத ரிதியில் வடிவமைக்கப்பட்ட ஒரு கட்சியாக அறிமுகப்படுத்தப்படுகின்றது. ஒரு கட்சியாக வளர்கப்படுகின்றது. தலைமைத்துவத்தை நோக்கி வருகின்ற கேள்விகளை இஸ்லாமியப் பார்வையில் அவர்கள் அறிமுகப்படுத்தி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசிற்கு ஒரு சூறா சபையிருக்கிறது. ஒரு High command இருக்கிறது. அதனூடாக எல்லாம் மசூறா முடிவுகளாக இருக்கின்றன என்ற அறிவித்தல்கள் மக்களுக்குப் பரப்பப்படுகின்றன. அஷ்ரப் அவர்களது கட்சி ஒரு இறுகிய வெளிநிலையிலிருந்து கருத்துக்களை உள்வாங்காத ஒரு கட்சியாக மாற்றியமைக்கின்றது. எங்களுக்குத் தெரியும், ஒரு சமூகத்தின் அல்லது அமைப்பின் வளர்ச்சி என்பது அந்த அமைப்பினை அபிவிருத்தி செய்வதில் தான் இருக்கும். அபிவிருத்தி என்பது அந்த அமைப்பின் உள்ளேயிருக்கும் விடயங்களை விமர்சித்து வெளிக்கொண்டு வருவது. ஆனால் அந்த விடயங்களைக் கையாளமல் ஒரு வகையான போராளித் தன்மையான ஒரு அமைப்பினை அல்லது ஒரு வளர்ச்சியினை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக் கொள்வதற்கு தலைவர் அஷ்ரப் அவர்கள் முயற்சித்திருக்கிறார்கள். இக்காலப்பகுதியில்தான் 88 – 94 வரையான காலப்பகுதியில் 6 வருடங்கள் விடுதலை இயக்கமாக அல்லது மக்களின் உரிமைக்காக பேசுகின்றோம் என்று கூறிய கட்சி முற்றுமுழுதாக தேர்தலை மையப்படுத்திய ஒரு கட்சியாக மாற்றப்படுகின்றது.
குறிப்பாக 94 காலப்பகுதியில் அமைச்சரவையில் இணைந்து கொள்வதற்கு அவர் எடுக்;கும் முடிவானது மிகக் குறுகிய காலத்தில் ஒரு பேரெழுச்சியினை காட்டவேண்டும் என்ற நிலைப்பாட்டினை அவருக்குள்ளே  ஒரு உந்து சக்தியாக மாற்றியமைக்கிறது. ஆரம்பத்தில்  நாம் எதிர்பார்த்த அந்த விடுதலை முஸ்லிம் சமூகத்தின் அரசியல் மயப்படுத்தப்பட்ட ஒரு நிகழ்வு என்ற கதைகள் எல்லாம் அதற்கு நேரெதிரான தேர்தல் அரசியல் என்ற அமைப்பை மையப்படுத்திய ஒன்றாக மாற்றமடைவதை அவதானித்து கொள்ளலாம். 98 காலப்பகுதி என்று நினைக்கின்றேன். அவர் அறிவித்த 2010 ஆம் ஆண்டை அல்லது 2012 ஆம் ஆண்டைய தேர்தல்களில் தேசிய ஐக்கிய முண்ணனி எதிர்க்கட்சியாக வரும் என்ற ஒரு அபிலாசையும் உப ஜனாதிபதி முறைமைகளினூடாக தன்னை ஒரு உப ஜனாதிபதியாக மாற்றிக் கொள்ள அவர் எடுத்த முயற்சிகளும்  இலங்கை முஸ்லிம்களுக்கும் அல்லது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசிற்குமிருந்த விடுதலை என்ற வேட்கையை தாண்டி தேர்தல் அபிலாசை என்பதை கொண்டு வந்து கொடுக்கின்றது. இந்த இடத்தில் அஷ்ரப் அவர்கள் பேசிய ஒரு விடயம் அதாவது எதிர்க்கட்சிகளாகவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியை நோக்கிப் பேசிய ஒரு விடயம் முக்கியமான கருத்தாகும். அபிவிருத்தி என்பது நோக்கமல்ல. உரிமையைப் பெற்று கொள்வதுதான் எங்களது நோக்கம் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசும் அஷ்ரபினால் வழிநடாத்தப்பட்ட அனைத்துப் போராளிகளும் பேசினார்கள். அன்றும் கூட அவர்கள் அறிந்து வைக்க வில்லை. ஐக்கிய நாடுகள் சபை கூட தனது இரண்டாவது மனித உரிமை சாசனத்தில் அல்லது நாம் குறிப்பிடுகின்ற இரண்டாவது Generation , Human Rights Development second generaration   குறிப்பிடுகின்றதில் அபிவிருத்தி என்பது ஒரு சலுகையல்ல. அது ஒவ்வொரு மனிதனும் பெற்றுக் கொள்ள வேண்டிய உரிமைகளைப் பற்றி பேசுகின்றது. ஆனால் 90 காலப்பகுதியில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அபிவிருத்தியை எமக்கு சலுகையா காட்டி உரிமையை வென்றெடுப்பதற்கான போராட்டத்தில் எம்மை இணைந்து கொள்ளுமாறு ஒரு பேரழைப்பை எமக்கு கொடுத்துள்ளார்.
94 ல் வருகின்ற போது அதே அமைப்பு அபிவிருத்திக்கான அமைப்பாக மாற்றும் போது பேரம் பேசுகின்ற சக்தியை பேசுகின்ற ஒரு தேர்தல் கட்சியாக மாற்றமடைவதனூடாக அந்த அமைப்பிலிருந்த விடுதலைக்கான விடயங்கள் அல்லது சமூகத்துக்கான ஒட்டுமொத்த நடுநிலைப்படுத்திய போராட்டமென்பதில் இச் சமூகத்தில் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு மாற்றமடைவதனை நாம் கண்டு கொள்ளலாம். அதன் பின்னர் இடம்பெற்ற அனைத்து விடயங்களையும் நாம் அறிவோம். அவருடைய மரணம் பற்றி. மரணத்தின் முன்னால் அந்தக் கட்சியில் அல்லது மரணத்திற்குப் பின்னால் அந்தக்கட்சி இவ்வளவு தூரம் ஒரு அரசியல் சித்தாந்தமற்ற கட்சியாக மாறிக் கொள்வதற்கும் தலைவர் அஷ்ரப்பினால் கட்சியின் 2ம் மட்டத் தலைமைகளை உருவாக்குவதில் அவர் கையாண்ட திருட்டுத்தனமான அணுகுமுறைகள் என்பன இந்த 9 வருட கால முஸ்லிம் சமூக அரசியலில் வரலாற்றில் ஒரு சீரழிவினை ஏற்படுத்துவதற்கு காரணமாக அமைந்தது. குர்ஆன், ஹதீஸ், சுன்னா என்ற அடிப்படையில் தான் இக்கட்சி உருவாக்கப்படுகின்றது. இந்தக்கட்சியின் போராட்டங்கள் அவ்வாறுதானிருக்கும் என்று தெரிவித்த அவர் அந்தக்கட்சிக்கான 2ம் மட்டத் தலைமைகளையோ அல்லது இலங்கை முஸ்லிம்களுக்கான 2ம் மட்டத் தலைமைகளையோ உருவாக்க அவர் தவறிவிட்டார். இக் கூற்றினை நான் மட்டும் கூறவில்லை. முஸ்லிம் சமூகத்தில் அரசியல் சம்பந்தமாகப் பேசுகின்ற அiனைவருமே இக் கூற்றினை முன்வைக்கின்றனர். இதே போல ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசைப் பொறுத்தவரை  அவர்கள் இலங்கை முஸ்லிம்களுக்கான அரசியல் அபிலாசைகள் என்று எந்தவகையான விடயத்தினையும் ஒட்டு மொத்தமாக சமூத்துக்கு  வெளிப்படுத்தவில்லை.  காலப் போக்கில் அவர்களது அரசியல் சித்தாத்தங்கள் தேர்தலுக்கேற்றாற்  போல மாறிக் கொண்டு வந்தது. இணைந்த வடக்கு கிழக்கில் தனியான அலகு என்ற ஒரு நிலைப்பாடு, அல்லது தென்கிழக்கு என்ற நிலைப்பாடு, கல்முனைக் கரையோர மாவட்டம் என்ற நிலைப்பாடு ஆகவே அவர்களுக்குள்ளேயே ஆகக் குறைந்தது  ஒரு பொதுத் திட்டத்தை முன்வைப்பதில் கூட அஷ்ரப் அவர்கள் கரிசனையற்றவர்களாகவேயிருந்தார். அல்லது அந்த் காலட்டத்தில் ஒரு பொதுத்தீர்வை முன்வைப்பதற்கு அவர் முயலவில்லை. என்றாலும் இந்த சமூகத்தின் அரசியலை நகர்த்திக் கொண்டு செல்வதில் அன்றைய காலட்டத்தில் அஸ்ரப்தான் கதாநாயகர். வேறு யாராலும் அந்த கைங்காpயத்தினை செயற்படுத்த முடியாத நிலைப்பாட்டிற்கு அவருடைய பெரும் ஆளுமை அவரை உருவாக்கியிருந்தது. இதில் மிகக்குறிப்பாகக் கூற முடியும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் திட்டத்திலே இல்லாத தென்கிழக்குப் பல்கலைக்கழக உருவாக்கம். திடீரென்று உருவாக்கப்பட்ட வந்தாறுமூலை பல்கலைக் கழகத்திலும் யாழ்ப்பாண பல்கலைக்கழக முரண்பாட்டினாலும் அந்த மாணவர்களுடைய போராட்டம் கொழும்பு சுற்று வட்டாரத்தில் எமது வந்தாறுமூலை பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மாணவர்களும் யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மாணவர்களும் அமர்ந்திருந்து போராட்டம் நடாத்தியமை அன்று பெருந் தலைவராகவிருந்த அஷ்ரபைச் சந்தித்து விவாதித்தமையும் இலங்கை முஸ்லிம் வரலாற்றில் மறக்க முடியாத அல்லது மறுக்கமுடியாத ஒரு மாபெரும் எழுச்சியினை ஏற்படுத்தி தென்கிழக்கு பல்கலைக்கழகத்தினது உருவாக்கத்தில் சென்று முடிந்தது. இதே நேரம் அஷ்ரப் இல்லாவிட்டால் அந்தக் கட்சியிலிருந்த யாரும் அந்தப் பல்கலைக்கழகத்தை உருவாக்குவதில் தலையெடுத்துப் பார்த்திருக்கமாட்டார்கள். ஏனென்றால் இன்று நன்றாகத் தொpயும் அரசியல் கட்சிளைப் பொறுத்தவரை பொலிசில் இருப்பவர்கள் அல்லது High command இல் இருப்பவர்கள் எத்தனை போpடம் இச்சமூகத்துக்கான தீர்வு இருக்கின்றது. ஆகக்   குறைந்தது எத்தனை பேர் பிரச்சினையை விளங்கியுள்ளனர். பகுப்பாய்வு செய்துள்ளனர் எனப் பார்த்தால் அதையும் விட அவர்களிடம் எந்த வீதியை தார் போடுவதற்கான contracts   ஐ எடுத்துக் கொள்ள முடியும்? எந்த minister க்கு  co-ordinator ஆக இருக்க முடியும் என்பதை அறிதல் முறைதான் அதிகமாக இருக்கும். அஸ்ரப் அவர்களுடைய பெருந் தானக்கியத்தினால் அன்றைய ஜனாதிபதியுடனிருந்த உறவினால் அந்த தென் கிழக்குப் பல்கலைக் கழகத்தைப் பெற்றுத் தந்தார். அதே வேளை அஸ்ரப் அவர்களை இலங்கை சமுதாயம் அல்லது இலங்கையிலிருக்கும் சிறுபான்மையினர் சிறுகட்சிகள் மறக்க முடியாத ஒரு நிகழ்வுதான் ஆர். பிரேமதாஸவுடன் அவருக்கு ஆதரவு அளிப்பதற்காக 12 வீதமாகவிருந்த தேர்தல் வெட்டுப்புள்ளியை 5 வீதமாகக் குறைத்த பெரும் சாணாக்கியத்தினை ஒரு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியுடன் பேரம் பேசி அன்று ஒரு சாதாரண பாராளுமன்ற உறுப்பினராகவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரென்ற அந்தஸ்திலிருந்த போது அவர் பெற்றார். அவருடைய மிகப் பெரும் ஆளுமை, பெரு விருட்சமாக அஸ்ரபுக்குள்ளே உருவாகிக் கொண்டிருந்த ஆளுமைதான் இலங்கை வரலாற்றில் சிறுபான்மையினருக்கும் சிறுபான்மையினக் கட்சிகளுக்குள்ளும் ஒரு அந்தஸ்தினைப் பெற்றுக் கொடுத்தது. அதே போல அவர் ஜனாதிபதி சந்திரிகாவுடன் போராடி அன்றிருந்த அதிகாரங்களைப் பயன்படுத்தி துறைமுகங்கள், கப்பற்றுறை அமைச்சினைப் பெற்றுக் கொண்டமை. அதனூடாக அவருடைய கட்சியிலிருந்த பெரும்பாலான இளைஞர்களுக்காவது முண்ணனியிலிருந்த இளைஞர்களுக்காவது தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு அவர் எடுத்த முயற்சிகள் என்பன இச் சமூகத்தில் ஒரு வகையான வளர்ச்சியினையும், ஒருவகையான அபிவிருத்தியினையும் ஏற்படுத்தக் காரணமாகியது. தோழர் மிஹாதுடன் இது சம்பந்தமாக கதைத்துக் கொண்டிருந்த போது இதுபற்றி அவர் கூறியதாவது ஆக்குறைந்தது 4000 திருமணங்களையாவது 94 காலப்பகுதியில் அவர் நடத்தி வைத்தாராம். சந்திhpக்கா அவர்கள் பசயனரயவந யிpழiவெஅநவெ  வழங்கிய போது 9000 திருமணங்கள் உடனே நடைபெற்றனவாம். கொடுத்து ஒரு மாதத்தில் நடைபெற்றனவாம். ஏனென்றால் பசயனரயவந முடித்து 5,6 வருடங்கள் காத்து; கொண்டிருந்தனர். மகனுக்கு தொழில் தேவை. தொழில் எடுத்தவுடனே திருமணம். அதே போல அஸ்ரப்பினால் துறைமுத்தில் தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுத்த போது அந்தக் குடும்பங்கள் ஓரளவு வளர்ச்சியினைக் கண்டன. கிராமத்துக்குள்ளேயே சுருங்கிக் கொண்டிருந்த எமது இளைஞர்கள் நகரத்தை நோக்கிய ஒரு வாழ்க்கையினை ஏற்படுத்தினார். இந்த வகையான விடயங்கள் அஸ்ரப் அவர்களின் சாணக்கியத்தினால் நடைபெற்றது. இவரது காலத்தில் நாம் அவதானிக்கலாம். இலங்கையின் கல்வித்துறையை மேம்படுத்துவதில் குறிப்பாக முஸலிம்களின் கல்வித்துறையை மேம்படுத்துவதில் அஸ்ரப் அவர்கள் பதியு+தீன் மஹ்மூது அவா;களையடுத்து ஒரு புள்ளியாக தென்படுகின்றார்.
அதே போல சந்திரிக்கா அம்மையார் தன்னுடைய இறுதிக் கால கட்டத்தில் கொண்டு வந்து இன்று ஜனநாயகம் பேசும் ஐக்கிய தேசியக் கட்சியால் வெறுக்கப்பட்ட இடைக்கால யாப்பு என்பது சட்டத்தரணி நீலன் திருச்செல்வத்தினாலும், அஸ்ரப் அவர்களினாலும் வரையப்பட்ட ஒரு யாப்பாக அதனைக் கூறலாம். இலங்கையின் அரசியல் யாப்பு ஒன்றை அல்லது அரசியல் சீர் திருத்தமொன்றை முன்வைப்பதில் இலங்கை தமிழ் – முஸ்லிம் சிறுபான்மையினரைச் சேர்ந்த பிரதிநிதிகள் முழுமையாக பங்கெடுத்துக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் அவ்யாப்பு. இன்று போற்றுகின்ற சமாதானத்தின் தூதுவனாக வர்ணிக்கப்படுகின்ற ரணிலும், இந்த அஸ்வர் ஹாஜியாரும்தான் அந்த யாப்பை இலங்கை பாராளுமன்றத்தில் எhpத்து கேவலத்தை ஏற்படுத்தியோர். ஆனால் நாங்கள் புலிகளுக்கும், ரணிலுக்கும்  இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடும் போது, ரணில் சமாதானத்தின் தூதுவனாக அவதானித்தோம். எதிர்க்கட்சியிலிருந்த போது சிறுபான்மையினரது யாப்பினை முற்று முழுதாக எhpத்தவர்கள் தான் அந்தக கட்சியினர். அந்த யாப்பினை இன்னொரு வகையில் 3 மணித்தியாலங்கள் சமர்ப்பித்து பாராளுமன்றில் நிறைவேற்றிய ஒரு பெருமையும் தலைவர்   எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களை சார்ந்திருந்தது. அந்தளவிற்கு அவர் தன்னிடமிருந்த ஆளுமையை பயன்படுத்தி எவ்வளவு தூரம் தாக்கங்களை ஏற்படுத்த முடியுமோ ஆட்சியாளாpடம் எவ்வளவு தூரம் தனக்கான விடயங்களைப் பெற்றுக் கொள்ள முடியுமோ அந்தளவிற்கான பேரம் பேசுதலை பேசியிருக்கின்றார்.
ஆனால் அவரது படுகொலை அல்லது மரணத்திற்குப் பின்னர் இவ் விடயங்களை யாரும் தொடர்ந்தேச்சையாக கொண்டு செல்ல முடியாதளவிற்கு அவருடைய ஆளுமைகளே அவரது சிஷ்யர்களை வளர்த்தெடுத்தது. ஆக இந்தப் பகுதிகளினூடாக தோ;தல் காலங்களில் எல்லா வேட்பாளர்களினதும் சுவரொட்டியில் மேல் மூலையில் அமர்ந்திருக்கும் அஷ்ரப் அவர்கள், ஒரு புனிதராக பேசப்படும் அஷ்ரப் அவர்கள் எங்களைப் போன்று ஒரு சாதாரண மனிதர்தான் என்பதை எங்களில் பலரும் மறந்துவிட்டோம். அஷ்ரப் அவர்கள் மரணமடைந்து கொழும்பில் அவரது ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படாமல் தப்பித் தவறி ஒலுவிலில் நல்லடக்கம் செய்யப்பட்டிருந்தால் எங்களுக்கு வருடத்துக்கொரு முறை ஒரு கந்தூhp கிடைத்திருக்கும். அதுவும் அளைள ஆகிவிட்டது. அந்தளவு அந்த மக்களிடையே சோகமிருந்தது. ஆனால் அண்மையில் நான் யோசித்த ஒரு விடயம் ஆந்த்ரா முதலமைச்சர் ராஜசேகர; ரெட்டி இறந்த பின்னர் அவருடைய 157 ஆதரவாளர்கள் இறந்து போனார். 16 பேர் தூக்குப் போட்டு இறந்தனர். 2 பேர் தீ;க்குளித்தனர். மிகுதியானோர் மாரடைப்பில் இறந்துபோயினர். ஏன் அஷ்ரப் அவர்கள் இறந்தபோது முஸ்லிம்கள் யாருமே இறந்து போகவில்லை. இந்தக் கேள்வி என்னை மிக அண்மைக்காலமாக அடித்துக்கொண்டிருக்கின்றது. ராஜசேகர ரெட்டியவர்கள் பொருளாதார hPதியில் ஆந்த்ராவை வெற்றிகரமாக மாற்றுவதில் உதவியவர். அஸ்ரபைக் கண்டவுடன் எமது பெண்கள் முக்காடு போட்டுக் கொண்டனர். எழுந்து நின்N;றாம். நாரே தக்பீர் அல்லாஹூ அக்பர் என்ற கோசத்துக்குப் பின்னர் அடிமையாகிக் கிடந்தோம். ஆனால் அவரது மரணம் ஒரு சிறு அழுகையை உருவாக்கியது. எங்களிடையே பெரும் தாக்த்தை உண்டாக்கவில்லை. அவர் மரணித்தவுடன் நாம் செய்த முதலாவது நல்ல விடயம் நாம் சண்டை பிடித்துக் கொண்டது, போட்டி போட்டது. தலைவர் ஹிஸ்புல்லாஹ்வும் ரவூப் ஹக்கீம் அவர்களும் ஒன்றாகப் போனார்கள். யார் தலைவராகிக் கொள்வது என்ற பிரச்சினைக்காக.. ஆகவே ஒரு விடுதலைக்கான கூடாரமாக இருந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸானது விடுதலையைப் பற்றிப் பேசியதா? அல்லது சுயநலன்களைப் பற்றிப் பேசியதா என்ற பெருங்கேள்விகளிருக்கின்றன. விடுதலைக்காகப் பேசியிருந்தால் அல்லது அவர்களிடம் அரசியல் அஜந்தா இருந்திருந்தால் அது தொடர்ந்திருக்க வேண்டும். அதற்காக பயிற்றுவிப்புகள் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் சாதரண தேர்தல் கட்சிகளை அல்லது இலங்கையிலிருக்கும் பெருங் கட்சிகளை பார்த்து வடிவமைக்கப்பட்ட ஒரு கட்சியாக அல்லது தன்னுடைய அரசியல் சித்தாத்தங்களை விடுதலையின் சித்தாத்தங்கள் என்ற நிலையைத் தாண்டி போpனவாதத்தைப் பார்த்து தன்னுடைய அரசியல் சித்தாத்தங்களை மாற்றிக் கொண்ட ஒருவராகத்தான் அஷ்ரப் அவர்களது அரசியல் வாழ்க்கையைப் பார்க்கவேண்டியிருக்கின்றது. அது தவிர அவரது இலக்கியம் சமூகப்பணி அவருடைய சட்டத்தரணி வாதங்கள் என்பன முஸ்லிம் சமூகத்துக்கு பல நன்மைகளை செய்திருக்கின்றன. ஆனால் அவர் சிஷ்யர்களை வளர்க்கவில்லை. அவருக்குப் பின்னே இச் சமூகத்தை வழிநடாத்த அவர் எவரையும் உருவாக்கிவிடவில்லை என்பதைத்தான் எங்களால் கண்டுகொள்ளமுடியும்.





இலங்கையின் அரசியல் கட்சிகள்



இலங்கையில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள்: