Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

சினிமா

கண்ணீருடன் வெளியேறினார் அனுஷ்கா...



நடிகர் கார்த்தி நாயகனாக நடிக்கும் 'அலெக்ஸ் பாண்டியன்' திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது, அதன் கதாநாயகி அனுஷ்கா அழுது கொண்டே அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

'அலெக்ஸ் பாண்டியன்' திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்து வருகிறார். படப்பிடிப்புக்கு வரும் அவர் தனக்கு மேக்கப் போட கூடவே ஒரு பெண்ணை அழைத்து வந்துள்ளார். இதைப் பார்த்த மேகப்பன் யூனியனைச் சேர்ந்தவர்கள் கோபப்பட்டுள்ளார்களாம்.

தாங்கள் இருக்கும் போது அனுஷ்கா எப்படி தனியாக ஒரு பெண்ணை அதுவும் எங்கள் சங்கத்தில் உறுப்பினராகாதவரை அழைத்து வந்து மேக்கப் போட வைக்கலாம் என்று கொதித்தெழுந்துவிட்டார்களாம் மேக்கப் யூனியனைச் செர்ந்தவர்கள்.

இதையடுத்து மேக்கப் யூனியனைச் சேர்ந்த சுமார் 30பேர் அடங்கிய குழுவொன்று 'அலெக்ஸ் பாண்டியன்' படப்பிடிப்பு நிலையத்துக்கு வந்து அனுஷ்காவுக்கு மேக்கப் போடும் பெண்ணை அங்கிருந்து வெளியேறச் சொன்னார்களாம்.

மேலும் அவர்கள் அனுஷ்காவை திட்டித் தீர்த்ததாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த அனுஷ்கா அங்கிருந்து அழுது கொண்டே ஓடிவிட்டாராம்.

நிலைமை மோசமடைவதை உணர்ந்த கார்த்தி தலையிட்டு மேக்கப் யூனியன் உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அனுஷ்காவுக்கு மேக்கப் போட்ட பெண்ணை வெளியேற்றிய பின்னரே மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பமானதாக தெரிவிக்கப்படுகின்றது.






முத்தத்துக்கு உகந்தவர் பிரியங்கா...


நடிகர் விஜயின் 'தமிழன்' திரைப்படம் மூலம் அறிமுகமாகி, பின்னர் இந்தித் திரையுலகிற்குச் சென்று அங்கு தனக்கென்று தனி இடத்தைப் பிடித்துக்கொண்டவர் நடிகை பிரியங்கா சோப்ரா. 2000ஆம் ஆண்டின் உலக அழகியாகத் தெரிவாகிய இவர், திரையுலகில் ஒரு பாடகியாகவும் வலம் வந்துள்ளார்.

இவையெல்லாம் சினிமா வாசகர்களைப் பொறுத்தமட்டில் பழைய தகவல்கள் என்றே கூற வேண்டும். ஆனால், இன்று பிரியங்காவைப் பற்றிய புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது.

முத்தமிடுவதற்கு உகந்த நடிகை யார் என்ற கருத்துக் கணிப்பொன்றை இந்திய இணையத்தளமொன்று நடத்தியுள்ளது. இதில் நடிகை பிரியங்கா சோப்ரா முதலிடத்தைப் பெற்றுள்ளார். இரண்டாவது இடத்தை நடிகை ஐஸ்வர்யா ராயும், மூன்றாமிடத்தை நடிகை கரீனா கபூரும் பெற்றுள்ளனர்.

அழகான உதடுகள், முத்தமிடத் தூண்டும் கவர்ச்சி ஆகியவற்றைக் கருத்திற்கொண்டே இந்த தேர்வு இடம்பெற்றதாக இந்த கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டு வாக்களித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

திரைப்படங்களில் முத்தமிடுவதில் புரட்சி படைத்தவர் பிரியங்கா சோப்ரா என்று திரையுலகில் ஒரு தகவல் பரவி வருகின்றது. அக்னீபாத், பெஃஷன், 7 கூன் மாப், காமினே, அய்த்ராஸ் என பல திரைப்படங்களில் இவருக்கு முத்தக் காட்சிகள் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.









சூர்யாவின் பெயரில் போலி பேஸ்புக், ட்விட்டர் கணக்குகள்


சமூக வலைத் தளங்களான பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் நான் இல்லை. என் பெயரில் இந்த தளங்களில் உள்ள கணக்குகள் போலியானவை என்று நடிகர் சூர்யா கூறியுள்ளார்.

பேஸ்புக், ட்விட்டரில் அநேகமாக பல நட்சத்திரங்களும் கணக்கு தொடங்கி, தங்களது பக்கங்களில் பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நடிகர் சூர்யா பெயரிலும் பேஸ்புக்கில சிலர் பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாற்றான் திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் 19ஆம் திகதி வெளியாவதாக சூர்யாவே அறிவித்துள்ளது போல் பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில், இது குறித்து சூர்யா விளக்கமளித்துள்ளார்.

'என் பெயரில் போலியாக ட்விட்டரிலும், பேஸ்புக்கிலும் சிலர் பதிவுகளை மேற்கொண்டு வருவதாக அறிந்தேன்.

ஏதோ நான்தான் தினமும் இப்படி செய்வதாக ரசிகர்கள் நினைக்க வாய்ப்புள்ளது. இது தவறு. ரசிகர்கள் நம்ப வேண்டாம்' என்று கூறியுள்ளார்.

சூர்யாவின் அதிகாரப்பூர்வமற்ற போலி பேஸ்புக் கணக்கை 1.3 இலட்சம் பேருக்கும் அதிகமானவர்கள் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.




நைட் பார்ட்டிக்கு தடை...



'மதராசப்பட்டினம்' திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து எமி ஜக்சனுக்கு பல்வேறு வாய்ப்புகள் கிடைத்த போதிலும் தனக்கு ஏற்றவாறு உள்ள கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த திரைப்படத்தை அடுத்து, கௌதம் மேனன் இயக்கத்தில் 'விண்ணைத்தாண்டி வருவாயா?' திரைப்படத்தின் இந்தி பதிப்பில் நடித்தார்.

அடுத்து, இயக்குனர் விஜய்  - விக்ரம் இணையும் 'தாண்டவம்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். ஷங்கர் - விக்ரம் இணையும் 'ஐ' திரைப்படத்தில் நடித்துவரும் எமி ஜக்சனுக்கு கடும் கட்டுபாடுகளை விதித்து இருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.

இரவானால் பார்ட்டியில் கலந்து கொண்டு, மிகவும் தாமதமாக தூங்கிவிட்டு காலையில் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறாராம் எமி. இதனால் காட்சிகளில் எமி ஜாக்சன் முகம் பொழிவாக இல்லையாம். காட்சிகள் துல்லியமாக அமைய வேண்டும் என்பதில் கவனம் செலுத்தும் ஷங்கருக்கு இதனால் மனவருத்தமாம். எமி ஜாக்சனை அழைத்த ஷங்கர் 'ஐ' திரைப்படம் முடியும் வரை இரவு நேர விருந்துகளில் கலந்து கொள்ளக்கூடாது' என்று உத்தரவிட்டிருக்கிறாராம்.

பெரிய பட்ஜெட், பிரம்மாண்ட இயக்குனர், முன்னணி நாயகன் அனைத்தும் ஒரே திரைப்படத்தில் அமைந்திருப்பதால் எமியும் உத்தரவிற்கு தலையாட்டி விட்டாராம்.








ரஜினி, கமலிடம் வாழ்த்து பெற்ற சிவா


தில்லு முல்லு படத்தை ரீமேக் செய்யவிருக்கும் குழுவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி, உலகநாயகன் கமல்ஹாசன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

வேந்தர் மூவீஸ் தயாரிக்க, வீராப்பு படத்தை இயக்கிய பத்ரி இயக்க, ´தமிழ்படம்´ சிவா நாயகனாக நடிக்கிறார். 

நாயகியாக இஷா தல்வார் நடிக்கிறார். இவர் சமீபத்தில் வெளியான மலையாள வெற்றிப்படமான ´தட்டத்தின் மறயத்து´ படத்தின் நாயகியாவார். 

தேங்காய் சீனிவாசன் கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடிப்பார் என்று தெரிகிறது. சவுகார் ஜானகி வேடத்தில் கோவை சரளா நடிக்கிறார். பிரபல காமெடி நடிகர் பிரமானந்தம் முக்கிய வேடமேற்றுள்ளார். 

இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன், யுவன்ஷங்கர் ராஜா இருவரும் முதன் முறையாக இணைந்து இசையமைக்கிறார்கள். 

படம் தொடங்கும் முன்பு, தில்லுமுல்லுவின் நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர் படத்தின் இயக்குநர் பத்ரியும், கதாநாயகனாக நடிக்கும் சிவாவும், 

படத்தின் இயக்குநர் கே பாலச்சந்தர், உலகநாயகன் கமல் ஹாசன் ஆகியோரும் இந்த ரீமேக் குழுவுக்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். 

தில்லுமுல்லுவில் கமல் ஹாசன் கவுரவ வேடத்தில் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 







நான் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி





















ரூ.100 கோடி வசூல் செய்த படங்கள் என்ற கணக்கு, நான் ஆமீர் கானுடன் சேர்ந்து நடித்த கஜினி படத்தில் இருந்து தான் தொடங்கியது என்று தெரிவித்துள்ளார் அசின். 

இது குறித்து அசின் கூறுகையில், நான் ஆமீர் கானுடன் சேர்ந்து நடித்த கஜினி(2008) படத்தில் இருந்து தான் இந்த ரூ.100 கோடி வசூல் கிளப் தொடங்கப்பட்டது. 

எனது முதல் இந்தி படமே ரூ.100 கோடி வசூல் செய்தது. கதாநாயகிகளை பொறுத்த வரையில் ரூ.100 கோடி வசூல் கிளப்பை தொடங்கியள் நான் தான் என்று உணர்கிறேன். 

ஆனால் அதை வைத்து நான் ஒரு போதும் விளம்பரம் தேடியதில்லை. நான் ஒரு சில இந்தி படங்களில் நடித்திருந்தாலும் அவை அனைத்தும் வெற்றிப் படங்களாகும். 

எனக்கு தற்பெருமை அடிக்கப் பிடிக்காது. அது என் குணமே இல்லை. பணம் எவ்வளவு வருகிறது என்பதை பார்ப்பது எனது வேலையில்லை. 

அந்த விஷயத்தை தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களிடம் விட்டுவிட்டு நடிப்பைப் பற்றி மட்டுமே நடிகர், நடிகைகள் கவலைப்பட வேண்டும். 

ரெடி, போல் பச்சன், ஹவுஸ்புல் 2 போன்ற நகைச்சுவை படங்கள் அடுத்தடுத்து கிடைத்தது தற்செயலானது. நகைச்சுவை தவிர பிற படங்களிலும் நடிக்க ஆசையாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். 























யாரிடமும் பழகுவதற்காக சினிமாவிற்கு வரவில்லை - லட்சுமி ராய்


யாரிடமும் பழகுவதற்காக வரவில்லை, நடித்து சம்பாதிக்கவே சினிமாவுக்கு வந்திருக்கிறேன் என்கிறார் லட்சுமி ராய். 

இது பற்றி லட்சுமி ராய் அளித்த பேட்டியில், அனுஷ்கா, எமி ஜாக்ஸன் என 2 கதாநாயகிகள் நடிக்கும் தாண்டவம் படத்தில் நீங்கள் நடிப்பது ஏன்? என்கிறார்கள். 

எனக்கு அந்த திரைக்கதை பிடித்திருந்தது. நல்ல படம் எதுவாக இருந்தாலும் அதில் நடிக்க வேண்டும் என்பது என் நோக்கம். 

இதில் பிளஸ், மைனஸ் பார்ப்பதில்லை. என்னால் முடிந்த அளவு உழைக்கிறேன். அதன்பிறகு என்ன வருகிறதோ அதை ஏற்றுக் கொள்கிறேன். 

போட்டி நிறைந்த சினிமா உலகில் எனக்கென ஒரு பாதுகாப்பு கவசத்தை அணிந்திருக்கிறேன். பணம் சம்பாதிக்கவும், பேர் பெறவும் தான் சினிமாவுக்கு வந்திருக்கிறேன். 

எனக்கென ஒரு வாழ்க்கை இருக்கிறது. நண்பர்களை உருவாக்கிக் கொள்வதற்காக நான் திரையுலகுக்கு வரவில்லை. நான் மதிக்கக்கூடிய நபர்களை அவ்வப் போது சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறேன். 

திரையுலகில் எல்லா நடிகைகளையும் எனக்கு தெரியும். அவர்கள் என்னிடம் அன்பாக இருப்பார்கள். நட்பு என்பது நெருங்கி பழகும் போது தான் உருவாகிறது. 

நான் யாரையும் காதலிக்கவில்லை, காதல் செய்வதற்கு நேரமும் இல்லை என தெரிவித்துள்ளார். 






நல்ல கதைகளின் மூலமே நல்ல சினிமாவை தர முடியும் : ஆர்னொன் மில்சான்

(தமிழ் மீடியா)    


நல்லகதைகளின் மூலமே நல்ல சினிமாவைத் தரமுடியும் என லொகார்ணோ சர்வதேச திரைப்படவிழாவில், ' சினிமாவுக்கான தளம் ' உரையாடற் பகுதியில் கலந்து கொண்ட பிரபல தயாரிப்பாளரும், இயக்குனருமான ஆர்னொன் மில்சான் (Arnon Milchan) குறிப்பிட்டார்.
நேற்று முன் தினம் இவ்விழாவில் லியோபார்ட் விருதுக் கௌரவம் பெற்றிருந்த இவர் கருத்துக்களம் பகுதியில் கலந்து கொண்டு, சினிமா தொடர்பான தன் அனுபவங்களையும் எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டதுடன், பார்வையாளர்கள் கேள்விகளுக்கும் பதிலளித்திருந்தார். அவ்வாறான பதிலளிப்பின் போது, கலைத்துவப் படைப்பாக்கமும், பொருளாதார பலமும் இணைந்திருந்தால் மட்டுமே, நல்ல படைப்புக்கள் தோன்றவும், பிரபலம் பெறவும் முடியும். பொருளாதார பலம் அதிகம் தேவைப்படும் காலமாகவுள்ள தற்போதுள்ள சினிமா வணிகச் சூழலில் அதன் சாத்தியப்பாடுகள் குறைவாகவுள்ளதாகவே கருத முடிகிறது. இளையவர்களை அதிகளவில் ஈர்க்கும் தற்போதைய பிரபலமான சினிமாக்கள் சிலவற்றைச் சுட்டி, அவற்றின் படைப்பாக்கம் சிறப்பானது எனத் தன்னால் குறிப்பிட முடியவில்லை என்றும் குறிப்பிட்டார்.


இதேவேளை லோகார்னோ திரைப்பட விழாவில் நேற்றைய 9வது நாள் நிகழ்வுகளின் போது, பிரபல ஹாங்கோங் இயக்குனரும், தயரிப்பாளருமான ஜோனி டூ விற்கு சிறப்பு லியோபார்ட் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.  Election 2, Life Without Principale, PTU, Mad Detective, Vengeance போன்ற மிகப்பிரபலமான கிழக்காசிய திரைபப்டங்களை உருவாக்கி, சர்வதேச திரையரங்குகளுக்கு எடுத்துச்சென்று திரும்பி பார்க்க வைத்தவர் ஜோனி டூ.  அடுத்த முறை லொகார்னோ திரைப்பட விழாவுக்கென தான் இயக்கிய திரைப்படமொன்றுடன் வருவேன் எனக்கூறி அவர் விடைபெற்றார்


அவரை கௌரவப்படுத்தும் வகையில், அவரது தயாரிப்பில் மற்றுமொரு பிரபல இயக்குனர் சோ சேங் (Soi Chaeng) இயக்கிய Che Sau (Motorway) திரில்லர் திரைப்படம் நேற்று பியாற்சா கிராண்டே திரையரங்கில் காட்சிப்படுத்தப்பட்டது. அதற்கு முன்னதாக அவரை, லொகார்னோ திரைப்பட கலை இயக்குனர் ஒலிவெர் பேர் மேடைக்கு அழைத்த போது, 'Motorway திரைப்படத்தின் Screen writer ஆன Kam-Yuen Szeto வை Che Sau ஞாபகப்படுத்தினார். புற்றுநோய் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால், திரைப்பட விழா நிகழ்வுகளில் அந்த ஸ்கிரீன் ரைட்டரால் கலந்து கொள்ள முடியவில்லை என கவலை தெரிவித்தார். இதனால், அவரை கௌரவப்படுத்தும் நோக்கில் திறந்த வெளி திரையரங்கின் முன்னாள் கூடியிருந்த பொதுமக்கள் அனைவரையும் ஒரு கணம் கைகளை மேல் அசைக்குமாறு கோரி, அந்த தருணத்தில் எடுத்த புகைப்படத்தனை தனது ஸ்கிரீன் ரைட்டருக்கு சென்று காண்பிக்க போவதாக தெரிவித்தார்.
நேற்று பியாற்சா கிராண்டே திரையரங்கில் Motor way உட்பட மூன்று திரைப்படங்கள் அடுத்தடுத்து திரையிடப்பட்டன. பெரும்பாலும், 40 நிமிடங்களுக்கு மேற்பட்ட Feature Film வகையிலான திரைப்படங்கள் அல்லது மிகச்சிறந்த அனுபவம் வாய்ந்த இயக்குனர்களின் திரைப்படங்களுக்கே பியாற்சா கிராண்டே திரையரங்கு முக்கியத்துவம் அளிக்கும் எனும் எதிர்பார்ப்பை நேற்றைய திரைப்படங்கள் முறியடித்திருந்தன.

முதலாவதாக திரையிடப்பட்ட திரைப்படம் Black Baloon எனும் 22 நிமிடம் கொண்ட திரைப்படம். Josh, Benny Safdie எனும் சகோதர்களால் உருவாக்கபப்ட்டது. அவர்களை மேடைக்கு அழைத்த போது முன்னாள் அமர்ந்திருந்த ரசிகர்களின் ஆதரை கண்டு வியந்து போன அவர்களில் ஒருவர் அடுத்தமுறை அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் நேரடியாக களமிறங்க போகிறேன். எனக்குள்ள ஆதரவு பிரம்மிக்க வைக்கிறது என்றார் நகைச்சுவையாக.

வானத்தில் தற்செயலாக பறக்கத்தொடங்கும் ஒரு கறுப்பு நிற பலூனை சுற்றி நகரும் நகைச்சுவையுடன் கூடிய திரைக்கதை அது. எனினும் எந்த வித கிராபிக்ஸிலும் இல்லாமல், பலூனை அதன் போக்கிலே படம்பிடித்து, சுற்றி நடப்பவற்றை திரைக்கதையாக்கியிருக்கும் உக்தி வியபுக்குரியது. இறுதிக்காட்சிகள் பலூன்களுக்கும், அன்பு பாசமெல்லாம் இருக்கலாம் என்ற எண்ணத்தை விதைத்து செல்கிறது.

 இரண்டாவதாக காண்பிக்கப்பட்டது,  90 நிமிடம் கொண்ட அமெரிக்க திரைப்படமான While We Where Here. கறுப்பு வெள்ளை நிறத்தில் டிராமா ஸ்டைலில், இத்தாலியின் Ischia தீவில் படம்பிடிக்கப்பட்ட படமிது.

புதிதாக திருமணமான அமெரிக்க பெண் ஒருவர் இத்தாலியில் பருவ வயது இளைஞன் ஒருவனுடன் கொள்ளும் காதல் பற்றியது. திரைப்படம் படம்பிடிக்கப்பட்ட காட்சி அமைப்பும், பின்னணி இசையும் நிச்சயம் இத்திரைப்படம் பியாட்சா கிராண்டே திரையரங்கில் மட்டும் பார்க்கப்பட வேண்டியது என உணர்த்தியது. மூன்றாவது, காண்பிக்கபப்ட்டது Motor way. இதுவும் 90 நிமிடம் கொண்ட திரில்லர், ஆக்ஷன் டைப்பிலான திரைக்கதை. சட்டவிரோத ரேசிங் செல்லும் வெறித்தனமான இளைஞர்களை கட்டுப்படுத்த நினைக்கும் கதைக்கருவை கொண்டது.

லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா முடிவடைவதற்கு இன்னமும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், இதுவரையில் வெளிவராத வித்தியாசமான திரைப்படங்கள் குறித்த அறிமுகக் குறிப்புக்கள், இத் திரைப்படவிழாவின் மேலும் பல சுவாரசியங்கள் என்பன தவறவிடாமல் சேகரித்துவரும் பரபரப்பின் மத்தியில் இன்று பகிர்ந்து கொள்ள முடிந்தவை இவை. நாளை இன்னும் சில சுவையான செய்திகளுடன் சந்திப்போம்.