Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

விளையாட்டு

மின்னல் வேக உசைன் போல்ட்-ஒலிம்பிக் போட்டியில் அடுத்தடுத்து சாதனைகள்







லண்டன்: லண்டன் ஒலிம்பிக் போட்டியில் ஜமைக்கா ஓட்டப்பந்தய வீரர் வீரர் உசைன் போல்ட் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் புதிய ஒலிம்பிக் சாதனை படைத்துள்ளார். மேலும் அடுத்தடுத்து 2 ஓலிம்பிக் போட்டியில் 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் தங்கப்பதக்கம் வென்றவர் என்ற புதிய சாதனையும் உசைன் போல்ட் படைத்துள்ளார்.
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான ஓட்டப்பந்தயம் இன்று நடைபெற்றது. இதில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்ட ஜமைக்கா வீரர் உசைன் போல்ட் பந்தய தூரத்தை 9.63 வினாடிகளில் கடந்து புதிய ஒலிம்பிக் சாதனை படைத்தார்.
மற்றொரு ஜமைக்கா வீரரான யோஹன் பிளாக் 9.75 வினாடிகளில் பந்தயத் தூரத்தை கடந்து 2வது இடத்தையும், அமெரிக்காவின் ஜஸ்டின் 9.79 வினாடிகளில் வந்து 3வது இடத்தையும் பிடித்தனர்.
ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் இன்று அதிகாலை 1.25 மணிக்கு நடைபெற்றது. இதில் ஜமைக்காவை சேர்ந்த உசேன் போல்ட் பந்தயத் தூரத்தை 19.32 வினாடிகளில் கடந்து தங்கப்பதக்கத்தை தட்டி சென்றார்.
அடுத்தப்படியாக ஜமைக்காவை சேர்ந்த யோஹன் பிளாக் 19.44 வினாடிகளில் பந்தயத் தூரத்தை கடந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். 19.84 வினாடிகளில் பந்தயத்தூரத்தை கடந்த ஜமைக்கா வீரர் வாரன் விர் வெண்கலப்பதக்கம் வென்றார். இதன்மூலம் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 3 பதக்கங்களையும் ஜமைக்கா வென்றது.
லண்டன் ஒலிம்பிக்கில் 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றது போல, கடந்த 2008ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கிலும் உசேன் போல்ட் 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் தங்கம் வென்றிருந்தார்.
முன்னதாக கடந்த 1984ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் அமெரிக்க தடகள வீரர் காரல் லிவிஸ் தங்கப்பதக்கங்களை வென்றார். அதேபோல 1988 ஒலிம்பிக் போட்டியில் காரல் லிவிஸ் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கமும், 200 மீட்டர் போட்டியில் வெள்ளிப்பதக்கமும் வென்றார். இந்த நிலையில் 2 ஒலிம்பிக் போட்டிகளில் 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் தங்கம் வென்ற உசேன் போல்ட் புதிய சாதனையை படைத்துள்ளார்.
அதேபோல கடந்த 1972 மற்றும் 1976ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பின்லாந்து வீரர் லஸ்ஸி விரென் 5 ஆயிரம் மீட்டர் மற்றும் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் அடுத்தடுத்து தங்கம் வென்றார். அவரது சாதனையையும் உசேன் போல்ட் தற்போது முறியடித்துள்ளார்.
இது குறித்து உசேன் போல்ட் கூறியதாவது,
என்னால் என்ன முடியுமா அதை நான் செய்துவிட்டேன். தற்போது நான் ஒரு பிரபலமாகிவிட்டேன். என்னால் ஒலிம்பிக் போட்டியில் சாதிக்க முடியாது என்று பேசிய மக்களின் பேச்சு இனி அடங்கும் என்றார்.
அடுத்த பதக்க வாய்ப்பு:
ஒலிம்பிக் போட்டியின் 400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தியத்திலும் உசேன் போல்ட் பங்கேற்க உள்ளார். அதிலும் தங்கப்பதக்கம் வெல்லுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.