Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Wednesday, July 18, 2012

தேசிய காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் விபரம் அறிவிப்பு

அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் மற்றும் அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகள் சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பட்டியலில் கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னர் தேசிய காங்கிரஸ் - அம்பாறை மாவட்டத்தில் 3 வேட்பாளர்களும் திருகோணமலை மாவட்டத்தில் ஒரு வேட்பாளர் மாத்திரமே ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினால் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

எனினும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வெளியேற்றத்தை அடுத்து அம்பாறை மாவட்டத்தில் 5 வேட்பாளர்களும் திருகோணமலை மாவட்டத்தில் இரண்டு வேட்பாளர்களும் ஒதுக்கப்பட்டுள்ளனர். 

இதேவேளை, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் -  மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 வேட்பாளர்களும் திருகோணமலை மாவட்டத்தில் ஒரு வேட்பாளர் மாத்திரமே ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினால் முன்னர் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

எனினும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வெளியேற்றத்தை அடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று வேட்;பாளர்களும் அம்பாறை மாவட்த்தில் ஒரு வேட்பாளர்களும் திருகோணமலை மாவட்டத்தில் இரண்டு வேட்பாளர்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இவர்களின் பெயர் விபரம் வருமாறு:

அம்பாறை மாவட்டம் - தேசிய காங்கிரஸ்

  1. ஜே.எம். சுபையிர் ஹாஜி – மருதமுனை
  2. எம்.எல்.ஏ. அமீர் (முன்னாள் மாகாண சபை உறுப்பினர்) - சம்மாந்துறை
  3. எம்.எஸ். உதுமாலெப்பை (முன்னாள் மாகாண அமைச்சர்) – அட்டளைச்சேனை
  4. சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் - கல்முனை
  5. எம். பதுர்கான் - பொத்துவில்
திருகோணமலை மாவட்டம் - தேசிய காங்கிரஸ்
  1. எச்.எம்.எம். பாயிஸ் (முன்னாள் தவிசாளர்) - கிண்ணியா
  2. நவாஸ் மாஸ்டர் - மூதூர்
அம்பாறை மாவட்டம் - அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்
  1. எஸ்.நிஜாமுதீன் - முன்னாள் அமைச்சர்
மட்டக்களப்பு மாவட்டம் - அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்
  1. எம்.எஸ். அமீர் அலி (முன்னாள் அமைச்சர்) – ஓட்டமாவடி
  2. ஏ.எம்.சுபைர் (முன்னாள் மாகாண அமைச்சர்) – ஏறாவூர்
  3. பொறியிலாளர் எம்.சிப்லி – காத்தான்குடி
  4. எம். அப்துல் ஹக்கீம் - வாழைச்சேனை
திருகோணமலை மாவட்டம் - அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்
  1. டாக்டர் எம். ஹில்மி (கிண்ணியா நகர சபை தவிசாளர்)  - கிண்ணியா
  2. அஷ்ஷெய்க் அப்துர் ரஸாக் - தோப்பூர் 


thanks tamilmirror

1 comment:

  1. muthal amachar thava eiai emacku amchar thanthal pothum

    ReplyDelete