(நல்ல நண்பன்)
மட்டக்களப்பு - வவுணதீவுப் பொலிஸ்ப் பிரிவிற்குட்பட்ட கொத்தியாபுலை பள்ளியடியில் நேற்று (15) இடம்பெற்ற திருமண வைபவத்தில் வழங்கப்பட்ட மதிய விருந்துபசார ஒவ்வாமை காரணமாக இதுவரை 427 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
இதில் 168 ஆண்களும் 166 பெண்களும் 93 சிறுவர்களும் அடங்குவர்.
திருமண வைபவத்தில் கலந்து கொண்டோர் உட்கொண்ட கோழி இறைச்சி காரணமாகவே இவ்வாறு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதென தெரியவருகிறது.
இது குறித்து பொலிஸாரும் பொது மக்கள் சுகாதார பிரிவினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கோழிகள் வாங்கும் போது கவனமாக பார்த்து வாங்கனும்
ReplyDelete