ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடவுள்ள முஸ்லிம் கட்சிகளுக்கான வேட்பாளர் ஒதுக்கீடு இன்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் ஆகிய முஸ்லிம் கட்சிகளுக்கே வேட்பாளர் பங்கீடு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தலைமையில் வேட்பாளர் ஒதுக்கீடு தொடர்பான கூட்டம் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், றிசாட் பதியுதீன் மற்றும் அதாவுல்லா உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
இதன்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு 11 வேட்பாளர்களும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கும் இணைந்து 8 வேட்பாளர்களும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பட்டியில் போடடியிட முடியும் என அறிவிக்கப்ட்டுள்ளது.
இதன் காரணமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் 5 வேட்பாளர்களும் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் தலா 3 வேட்பாளர்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பட்டியில் போட்டியிட முடியும்.
இதேவேளை, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கும் இணைந்து அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் தலா 3 வேட்பாளர்களும் திருகோணமலை மாவட்டத்தில் 2 வேட்பாளர்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பட்டியலில் நிறுத்த முடியும்.
இதற்கு மேலதிகமாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பாக மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு முஸ்லிம் வேட்பாளர் வீதம் நிறுத்தப்படுவர் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் ஆகியோர் போட்டியிடுவர்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் முதலமைச்சர் வேட்பாளர் என தெரிவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.அமீர் அலி, கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடமாட்டார் எனவும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
(Thanks Tamilmirror)

No comments:
Post a Comment