Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Monday, July 16, 2012

முதலமைச்சர் வேட்பாளராக பைசால் காசீம்?!

கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கரஸின் முதலமைச்சர் வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம் களமிறங்கவுள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கட்சி தலைமையகமான தாருஸ்ஸலாமில் இன்று திங்கட்கிழமை நடைபெறவுள்ள அதியுயர் பீட கூட்டத்தினை அடுத்துஇ கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை பைசால் காசீம் இராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுவகவும் முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம் இராஜினாமாசெய்தால்இ சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் சம்மாந்துறை பிரதேசத்தில் போட்டியிட எதிர்பார்த்துள்ள எம்.மன்சூர், விருப்பு வாக்குகளின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் "முதமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம் நியமிக்கப்படுவார் என அரசாங்கத்தினால் உறுதிமொழி வழங்கப்பட்டால் மாத்திரமே அவர் போட்டியிடுவார்" என நாடாளுமன்ற உறுப்பினரின் நெருங்கிய வட்டாரங்கள்  தெரிவித்தன.

தனது சொந்த ஊரான நிந்தவூரில் தங்கியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம் கட்சி தலைவர் ரவூப் ஹக்கீம் அழைப்பினையடுத்து, ஹெலிக்கப்பட்டர் மூலம் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கொழுமை வந்தடைந்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில்இ அமைச்சர் ரவூப் ஹக்கீம்இ பிரதி அமைச்சர் பசீர் சேகுதாவூத் மற்றும்  நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம் ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன கலந்துரையாடல் மேற்கொள்ளவுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை, அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடல் என்ற தீர்மானத்தை அடுத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கரஸின் அதியுயர் பீட கூட்டத்திலிருந்து வெளியேறிய கட்சியின் பொது செயலாளர் ஹசன் அலி உள்ளிட்டோர் நாளை நடைபெறவுள்ள அதியுயர் பீட கூட்டத்தில் கலந்துகொள்வார்கள் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த 2008ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபை தேர்த்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக செயற்றபட்ட ரவூப் ஹக்கீம், ஹசன் அலி மற்றும் பஷீர் சேகுதாவூத் ஆகியோர் இராஜினாம செய்ததுடன் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.
(அப்படி எதுவும் இல்லை என்று மறுக்கிறார் பாராளுமன்ற உறுப்பினர் பைசஷால் காசிம்)

No comments:

Post a Comment