கிண்ணியா பாலத்திற்கு அருகில் முஸ்லிம் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற வரவேற்பு கோபுர நிர்மாணப் பணிகளை உடனடியாக இடைநிறுத்துமாறு பெரும்பான்மை இன அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் அப்பகுதி மக்கள் கவலையும் குழப்பமும் அடைந்துள்ளனர் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் அப்பகுதி மக்கள் கவலையும் குழப்பமும் அடைந்துள்ளனர் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த எச்சரிக்கையின் பின்னணியில் சீனங்குடா பிரதேசத்திலுள்ள பௌத்த மதகுரு ஒருவர் இருப்பதாக நம்பப்படுகிறது. இவர் இதற்கு முன்னர் இப்பிரதேசத்தில் உள்ள அலுவலகங்களின் பெயர்ப் பலகைகளில் காணப்பட்ட தமிழ் வாசகங்களை அகற்றியுள்ளார் என்றும் அப்பகுதி மக்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
தற்போது இவரது தூண்டுதலின் பேரிலேயே கிண்ணியா பாலத்திற்கு அருகில் முஸ்லிம் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற வரவேற்பு கோபுர நிர்மாணப் பணிகளை இடைநிறுத்துமாறு பெரும்பான்மை இன அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக தாம் நம்புவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் ஐம்பது இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டிலேயே இவ்வரவேற்பு கோபுரம் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த சர்ச்சை குறித்து அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், அதாவுல்லா, ரிஷாத் பதியுதீன் உள்ளிட்ட அரசியல் தலைமைகளினதும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினதும் முஸ்லிம் பொது அமைப்புகளினதும் கவனத்திற்கு கொண்டு சென்றிருப்பதாக பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.
நன்றி மெற்றோ மிரர்
No comments:
Post a Comment