அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை – அக்கரைப்பற்று பிரதான வீதியிலுள்ள ஒலுவில் பாலத்தின் கீழ் வேன் ஒன்று பாய்ந்து சேதத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று காலை கல்முனையிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த வோனின் சாரதியின் கவனயீனக் குறைபாட்டினால் மேற்படி விபத்து ஏற்பட்டுள்ளது. சாரதி வேனைச் செலுத்தி வரும்போது அவர் கையடக்கத் தொலையில் தொடர்பு கொண்டிருந்ததாலேயே இவ்விபத்து
இடம்பெற்றுள்ளதாக அதை நேரில்கண்ட சிலர் தெரிவித்தனர்.
கையடக்கத் தொலைபேசியில் பதிலளித்துக் கொண்டு வந்த வான் சாரதி திடிரென முன்னால் வந்த பாலத்தையும் வீதி வளைவையும் அவதானித்தவுடன் வேனை தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர முடியாததன் காரணத்தினால் வீதியை விட்டு பாய்ந்துள்ளது.
இதனால் சாரதிக்கும் மற்றும் ஒருவரும் பலத்த காயங்களுடன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணையை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


No comments:
Post a Comment