அமைச்சர் ரிசாட் பதியூதீன் அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்தின் உதவியை நாடியுள்ளார்.தமக்கு எதிராக கொழும்பு மற்றும் மன்னார் நீதிமன்றில் நடத்தப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் கண்காணிக்குமாறு அனைத்து பாராளுமன்ற
ஒன்றியத்திடம் கோரியுள்ளார்.இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஒருதலைப்பட்சமாக தமக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளதாகவும், தம்மிடம் விளக்கம் கோராமலேயே நாடு தழுவிய ரீதியில் போராட்டங்களை நடத்தியதாகவும் அவர்சுட்டிக்காட்டியுள்ளார்.சில ஊடகங்களும் சட்டத்தரணிகள் சங்கமும் தமக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும் இது பாதகமான நிலைமையை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.நிறைவேற்று அதிகாரத்திற்கும் நீதிமன்றக்கட்டமைப்பிற்கும் இடையிலான முரண்பாடாக இந்தப் பிரச்சினையை வெளிப்படுத்த சில தரப்பினர்முயற்சித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.நீதி நிலைநாட்டப்படுவதற்கு அனைத்து பாராளுமன்றஒன்றியம் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென ரிசாட் பதியூதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:
Post a Comment