Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Saturday, August 11, 2012

மதஸ்தலங்கள் தாக்கப்படுவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது: ரன்முத்துகல சங்கரத்ன தேரர்

இலங்கை நாட்டில் எந்த மதஸ்தலங்களையும் உடைப்பதை நாங்கள் அனுமதிக்க முடியாது. கடந்த காலங்களில் நடந்த சம்பவங்கள் எனக்கு மிகவும் வேதனையளிக்கின்றன.

இந்த நாட்டில் வாழ்கின்ற சகல மக்களுக்கும் சகல உரிமைகளும் இருக்கின்றன. 


பெரும்பான்மை சிறுபான்மை என்றில்லாது இந்த நாட்டில் எல்லோரும் சமமாக ஒற்றுமையோடு வாழ வேண்டும் என கல்முனை நகர பௌத்த விகாரையின் விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

கல்முனை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி ஜயந்த நாணயகார தலைமையில் நேற்று கல்முனை பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, விஷேட அதிதியாக அம்பாறை மாவட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுந்தர திரலால் ரணகல ,கல்முனை நகர பௌத்த விகாரையின் விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் ஆகியோர் உட்பட ஏனைய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளும் சர்வ மதத் தலைவர்களும் ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment