Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Sunday, September 23, 2012

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஊடகவியலாளர் மாநாடு 23.09.2012


படவிளக்கம்:
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஊடகவியலாளர் மாநாடு ஞாயிறு (23) கட்சி தலைமையகம் தாருஸ்ஸலாமில் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹஸன் அலி தலைமையில் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.
கிழக்கு மாகாணசபையில் முஸ்லிம் காங்கிரஸ் முதலமைச்சர் 2 1/2 வருட காலம் பதவி வகிப்பார்
உடன்பாடு மீறப்பட முடியாது என செயலாளர் நாயகம் உறுதிபட தெரிவிப்பு

கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் பதவி சுதந்திர கட்சியைச்சேர்ந்த நஜீப் ஏ மஜீதுக்கு முஸ்லிம் காங்கிரஸின் சிபாரிசின் பெயரிலேயே வழங்கப்பட்டுள்ளது, அவர் முதல்மைச்சராக் தெரிவு செய்யப்பட்டுள்ள விடயத்தை நான்தான் நஜீப் ஏ மஜீதுக்கு முதன் முதலாக தெரிவித்தேன். இரண்டாவது பகுதி பதவிக்காலத்துக்கு முஸ்லிம் காங்கிரஸ் மாகாணசபை உறுப்பினர் ஒருவரே முதலமைச்சராக இருப்பார், இதற்கான உடன்பாடு பேச்சுவார்த்தையின் போது எட்டப்பட்டுள்ளது. அது மீறப்படுமானால் மிகவும் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரி.ஹஸன் அலி எச்சரித்தார்.

முஸ்லிம் காங்கிரஸின் ஊடகவியலாளர் மாநாடு ஞாயிற்று கிழமை (23) கொழும்பில் உள்ள கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நடைபெற்ற போது அதற்க்கு தலைமைதாங்கி, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத்தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம், எம்.எஸ்.தெளபீக், எம்.எஸ்.எம்.அஸ்லம், எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் கிழக்குமாகாணசபை உறுப்பினர்களான ஹாபிஸ் நஸீர் அஹமட், ஹஸன் மெளலவி, எம்.ஐ.எம்.மன்சூர், ஆர்.எம்.அன்வர், ஏ.எல்.தவம்,ஏல்.எல்.எம்.நஸீர், கட்சி முக்கியஸ்தர்கள் தமிழ், ஆங்கில, சிங்கள், இலத்திரனியல்,அச்சு ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

அரசாங்கத்தோடும், தமிழ் தேசிய கூட்டமைப்போடும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட போதிலும், கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் அனைவருமாக மேற்கொண்ட முடிவின்படியே அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க தீர்மானித்ததாகவும், அது சில ஊடகங்களும், தனியார்களும் தங்களது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றதாக தலைவர் அமைச்சர் ஹக்கீம் மட்டும் மேற்கொண்ட முடிவு என கூறுவது தவறானது என்று இம்மாநாட்டில் சுட்டிக்காட்டப்பட்டது.

உடன்படிக்கையின் உள்ளடக்கம்பற்றி அறிந்து கொள்ள ஊடகவியலாளர் சிலர் அதிக ஆர்வம் செலுத்திய போதிலும், சில தீய சக்திகளினதும், சந்தர்ப்ப வாதிகளினது தேவைக்கு தீனி போடுவதாக அது அமைந்து விடும் என்பதால் சமூக நலன் சார்ந்த உடன்பாடுகளை பகிரங்கபடுத்தவேண்டிய அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

கிழக்குமாகாணசபை அமைச்சர்களாக சிங்களவர் ஒருவரும், தமிழர் ஒருவரும், நிச்சயம் இடம்பெற வேண்டும் என்பதை முஸ்லிம் காங்கிரஸ், கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்திய அரசாங்க அமைச்சர்களிடன் மிகவும் திட்ட வட்டமாக கூறியிருக்கிறது. வலிந்துபோய் அரசாங்கத்தின் காலடியில் விழவில்லை என்றும், வேண்டுகோளின் நிமித்தம் சுயகெளரவத்தை இழக்காமல் மிகவும் முக்கியமான கோரிக்கைகளுடனேயே ஒத்துழைப்பு வழங்க முன்வந்ததாகவும் கூறப்பட்டது.

அதாவுல்லா பற்றி கேட்கப்பட்ட போது அவரை கணக்கில் எடுக்கவே இல்லை என்றும் அவரின் கோட்டை என்று தம்பட்டம் அடிக்கும் அக்கரைப்பற்றில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள மாகாணசபை உறுப்பினர் தவம் மாகாணத்திலேயே முஸ்லிம் காங்கிரஸில் கூடுதலான வாக்குகளைப்பெற்று வெற்றியீட்டி இருப்பது அதாஉல்லாக்கு ஏற்பட்டுள்ள பாரிய வீழ்ச்சி என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.




No comments:

Post a Comment