Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Monday, September 24, 2012

மாத்தளையில் 409 பேர் டெங்கினால் பாதிப்பு

2018 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் செப்டம்பர் வரையான காலப்பகுதியில் 409 பேர் டெங்குக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளதாக மாத்தளை மாவட்ட தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதேவேளை, மாத்தளை மாவட்டத்தில் மாத்திரம் ஒரே வாரத்தில் 25 பேர் இவ்வாறு பீடிக்கப்பட்டிருந்தமை
கண்டறியப்பட்டுள்ளதாக மாத்தளை மாவட்ட தொற்று நோய் தடுப்புப் பிரிவு நிப
ணர் டாக்டர் சுனில் நவரத்ன தெரிவித்தார். அவர் அது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

ஆகஸ்ட் மாதத்தில் மாத்திரம் மாத்தளையில் 6 பேரும், யட்டவத்தையில் ஒருவரும் உக்குவளையில் 9 பேரும் இறத்தோட்டையில் 5 பேரும், நாவுலவில் ஒருவரும் பல்லேபொலவில் 8 பேரும் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டள்ளது. மழை காலம் ஆரம்பமாகாவிட்டாலும் ஆங்காங்கே சிறிய அளவிலான மழைத் தூறல்கள் விழுவதனால் தேங்கி நிற்கும் நீரில் டெங்கு நுளம்பு உற்பத்தியாகக்கூடிய வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது.

௭னவே, டெங்கு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரப் பிரிவினர் மக்களுக்கு விழிப்புணர்வுகாட்டி வருகின்றனர். அதற்கிணங்க அவர்கள் அறிவித்துள்ள ௭ச்சரிக்கை மற்றும்அறிவுறுத்தல்களை புறக்கணித்து வருபவர்களுக்கெதிராக மாத்தளையில் மாத்திரம் 33 வழக்குகள் தொடரப்பட்டிருக்கின்றன ௭னவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment