Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Monday, September 17, 2012

கிழக்கின் முதலமைச்சர் முஸ்லிம் ஒருவர் என்பது உறுதியாகி விட்டது - ஹக்கீம்-


கிழக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் முஸ்லிம் ஒருவர் என்பது உறுதியாகி விட்டது. அதிலும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரே அந்த ஆசனத்தில் அமரப் போகின்றார் என்பது இன்னும் உறுதியான விடயமாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

நேற்று (16) மாலை கொழும்பு தாருஸ்ஸலாம் தலை
மையகத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரபின் 12வது ஆண்டு நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நினைவுப் பேருரை நிகழ்த்தினார்.

இதில் கட்சியின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத், செயலாளர் நாயகம் ஹசன் அலி, பிரதிச் செயலாளர் நாயகம் சட்டத்தரணி நிசாம் காரியப்பர், தேசிய பிரசார செயலாளர் செனட்டர் மசூர் மௌலானா உட்பட பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாண சபை உறுப்பினர்களும் பிரமுகர்களும் பெரும் எண்ணிக்கையிலான கட்சித் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;

"மறைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரபின் இழப்பு இலங்கை முஸ்லிம்களுக்கு ஈடுசெய்ய முடியாதது. தலைவரின் மறைவுக்குப்பின் அவரால் ஆரம்பிக்கப்பட்ட இக்கட்சி எத்தனையோ சதிகளையும் வழக்குளையும் சந்தித்திருந்தும் இன்னும் குழையாது நிலையாகவே இருக்கின்றது என்பதற்கு சாட்சியாக நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.

தாங்கள் எல்லோரும் சமகால அரசியல் நிலைமையயை அறிய ஆவலாய் இருப்பீர்கள். கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் முஸ்லிம் ஒருவர் என்பது உறுதியாகி விட்டது. நாங்கள் அரசுடனும் - தமிழ் தேசிய கூட்டமைப்போடும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம்.

இன்று (நேற்று 16) காலை தமிழ் தேசிய கூட்டமைப்போடு பேச்சுவார்தையில் ஈடுபட்ட வேளை நாங்கள் மூவின மக்களுக்கும் பொருத்தமான ஆட்சி கிழக்கில் அமைவதை வலியுறுத்திக் கூறினோம். தமிழ் தேசிய கூட்டமைப்பு அவர்களுடன் இணைந்து ஆட்சியை அமைக்க உதவுமாறு எங்களை கேட்டுக் கொண்டனர். ஆனால் நாங்கள் அரசுக்கு அதரவு அளிப்பதா ? இல்லையா ? என்பதை திட்டவட்டமாகக் கூறவில்லை.

அரசாங்கத் தரப்பும் பேசி இருக்கிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பும் பேசி இருக்கிறது. ஆனால் நாங்கள் இன்னும் ஒரு சில தினங்களுக்குள் எங்களுடைய முடிவை அறிவிப்போம்.

எப்படி இருப்பினும் கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் முஸ்லிம் என்பது உறுதியாகி விட்டது. ஏனெனில் கிழக்கு மாகாண சபையில் 15 முஸ்லிம் உறுப்பினர்கள் உள்ளனர். ஆகையினால் இதை தீர்மானிக்கும் தார்மீக உரிமை முஸ்லிம்களுக்கு உள்ளது.

தாங்கள் இதை ஏன் இழுத்தடித்து கொண்டிருக்கின்றீகள் என ஊடகங்கள் எங்களை கேட்கின்றன ? ஆனால் தாமதிப்பது நாங்கள் அல்ல. ஆட்சியை அமைப்பதற்கு காத்திருக்கும் அரசாங்கமும் தங்களுக்கு பெரும்பான்மை உள்ளது என கூறிக்கொண்டிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பும்தான் காரணம். நாங்கள் காரணம் அல்ல.

ஆதரவு அளிப்பதுதான் நாங்கள். ஆனால் அரசாங்கம் ஆட்சியை அமைக்கின்ற போது சமூக நலனை முன்னிலைப்படுத்தி ஆட்சியை அமைப்போம். தேர்தல் காலங்களில் வெற்றிலைச் சின்னத்தை அவமதித்து பேசியதாகவும் சிலர் கூறுகின்றனர்.

ஆனால் இது தவறான வாதமாகும். தேர்தல் காலங்களில் நாங்கள் யாருடனும் ஆட்சி அமைப்பது என்று சொல்லவுமில்லை. தூர சிந்தனையுடன்தான் எங்களது மேடைப் பேச்சுகள் அமைந்திருந்தன" என்றும் குறிப்பிட்டார்.
 

No comments:

Post a Comment