பாகிஸ்தான் வரீசிஸ்தான் மாகாணத்தில் ஆளில்லா விமானம் மூலம் அப்பாவி மக்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தி வரும் அமெரிக்காவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இம்ரான்கான் மேற்கொண்ட பேரணியை அந்நாட்டு ராணுவம் தடுத்து நிறுத்தியது.
அமெரிக்காவின் அடாவடி தனத்தை கண்டித்து, முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைவருமான

இம்ரான்கான், ஏராளமான ஆதரவாளர்களுடன் கடந்த 6ஆம் திகதி அமைதி பேரணி தொடங்கினார். பழங்குடியினர் அதிகம் வசிக்கும் வரீசிஸ்தான் பகுதிக்குள் பேரணியினர் நுழைய முயன்ற போது, அவர்களை அந்நாட்டு இராணுவம் தடுத்து நிறுத்தியது.
பேரணியினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்ற தகவல் வெளியானதால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாக இராணுவத்தினர் தெரிவித்தனர். இதனால் கோட்காய் கிராமப் பகுதியில் பழங்குடியின மக்கள் மத்தியில் இம்ரான் கான் பொதுக்கூட்டத்தில் பேசுவதாயிருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
பின்னர் தனது ஆதரவாளர்களுடன் கைபர் பக்துன்வா மாகாணத்துக்கு வந்த இம்ரான், அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார்.

No comments:
Post a Comment