Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Friday, October 12, 2012

மிஷன் லங்கா விமான சேவையை ஆரம்பித்ததால் விமான சேவைக்கு பாரிய நெருக்கடி: அஜித் பெரேரா

ஸ்ரீலங்கன் விமான சேவையூடாக குறைந்த கட்டணங்களில் எமது மக்களுக்கு புனித யாத்திரைகள் செல்லும் வாய்ப்பை கைவிட்டு புதிதாக மிஷன் லங்கா விமான சேவையை ஆரம்பித்ததால் எமது விமான சேவை பாரிய நெருக்கடிகளை சந்தித்துள்ளதாக
ஐ.தே.க. எம்.பி. அஜித் பெரேரா நேற்று சபையில் தெரிவித்தார். 

போட்டித் தன்மை மிக்க உலக விமான சேவையில் எம்மால்
 தனித்து இயங்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கை விமான விபத்துக்களை தடுப்பதற்கான ஒழுங்கு விதிகளை அங்கீகரிப்பதற்கான பிரேரணை மீதான விவாதம் நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போது உரையாற்றுகையிலேயே அஜித் பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
நிறைவேற்று அதிகாரத்தின் முதன்மையானவரால் தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஸ்ரீலங்கா விமான சேவையை அரசாங்கம் மீளப் பெற்றது.

இது இன்று அச்சேவையை நடத்துவதற்கு பராமரிப்பு செய்வதற்கு பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கும் நிலை உருவாகியுள்ளது.

இவ்வாறானதோர் நிலையில் எமது மக்களுக்கு புனித யாத்திரைகளை மேற்கொள்வதற்காக எனக் கூறி பட்ஜட் எயார் லைன் என்ற பெயரில் மிஹின் எயார் லைன் ஆரம்பிக்கப்பட்டது.

இது இன்று பாரிய நெருக்கடிகளை நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவிலும் பட்ஜட் விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டு இன்று நஷ்டங்களை எதிர்நோக்கியுள்ளது.

தனியொருவரை சந்தோஷப்படுத்துவதற்காகவே மிஹின் எயார் ஆரம்பிக்கப்பட்டது.

எமது நாட்டவர்கள் குறைந்த கட்டணத்தில் விமான சேவைகளை ஸ்ரீலங்கா எயார் லைன்ஸ் ஊடாகவே பெற்றுக் கொள்ளவிருந்தது.

ஆனால் இதனைச் செய்யாமல் மிஹின் லங்கா விமான சேவையை ஆரம்பித்து பல கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இச்சேவையை நிறுத்தினால் உண்மை வெளியாகி விடும் என்பதனால் நஷ்டத்திற்கு மத்தியிலும் மிஹின் லங்கா சேவை தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது.

போடடித் தன்மை மிக்க உலக விமானச் சேவைகளில் எம்மால் தனித்து அரச செலவில் விமானச் சேவையை நடத்த முடியாது.

அவ்வாறானதோர் சூழ்நிலையிலேயே ""எமிரேட்ஸ்' நிறுவனத்திடமிருந்து அரசாங்கம் ஸ்ரீலங்கா விமான சேவையை பொறுப்பேற்று இன்று இலங்கை விமானச் சேவையில் நஷ்டத்தையும் நெருக்கடிகளையும் அரசாங்கம் தோற்றுவித்துள்ளது.

No comments:

Post a Comment