Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Sunday, October 21, 2012

இஸ்லாத்திற்கு மாறவில்லை. கரீனா - சயீப் திருமணம் செல்லாது. தாருல் உலூம் அமைப்பு தெரிவிப்பு.


மதம் மாறாத கரீனாவை சயீப் அலிகான் திருமணம் செய்தது முஸ்லிம் மத சட்டப்படி செல்லாது என்று இஸ்லாமிய அமைப்பான தாருல் உலூம் தியோபந்த் அறிவித்துள்ளது.

முதல் மனைவி அம்ரிதா சிங்கை விவாகரத்து செய்த சயீப் அலிகான், நடிகை கரீனா கபூரை 5 ஆண்டுகள் காதலித்தார். சில தினங்களுக்கு முன்புதான் இருவருக்கும் பதிவுத் திருமணம் நடந்
தது.

கரீனா கபூர் இந்து மதத்தைச் சேர்ந்தவர். சயீப் அலிகான் முஸ்லிம். ஆனால் இந்து முறைப்படி கரீனாவுக்கு தாலி கட்டிதான் சயீப் திருமணம் செய்தார்.

கரீனா கபூர் முஸ்லிம் மதத்துக்கு மாறவில்லை. எனவே முன்னணி இஸ்லாமிய அமைப்பான தாருல் உலூம் தியோபந்த் இந்த திருமணத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், சயீப் அலிகான்-கரீனா கபூர் திருமணம் முஸ்லிம் மத சட்டத்துக்கு விரோதமானது. திருமணத்துக்கு முன் கரீனா கபூர் முஸ்லிம் மதத்துக்கு மாறி இருக்க வேண்டும். ஆனால் அவர் மதம் மாறவில்லை. எனவே இந்த திருமணத்தை இஸ்லாம் அங்கீகரிக்காது, என்று குறிப்பிட்டுள்ளது.

அதனை தொடர்ந்து பலவேறு இஸ்லாமிய அமைப்புகளிடமிருந்து எதிர்ப்பு வர ஆரம்பித்த்தை தொடர்ந்து தன் பெயருடன் ‘கான்’ ஐயும் சேர்த்துக்கொண்டு, நேற்று இரவு முதல் கரீனா கபூர் கான் ஆக மாறினார்.

இது தொடர்பாக தனது மேனேஜர் மூலம் மும்பை பத்திரிகை அலுவலகங்களுக்கும், சினிமா நிறுவனங்களுக்கும் தகவல் அனுப்பி, உடனடியாக இந்த பெயர் மாற்றத்தை நடைமுறைப்படுத்தும்படி கேட்டுக்கொண்ட கரீனா, தான் இஸ்லாம் மதத்திற்கு மாறுவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும், வீணாக அது குறித்த சர்ச்சைகளை எழுப்பவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
 

No comments:

Post a Comment