மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பணிப்பெண் பதிமா ரிசானா ராபீக் தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தத் தயார் என சவூதி அரேபிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ரிசானா விடுதலை
ரிசானா விடுதலை
தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்த இலங்கை சட்ட மா அதிபர் நேரில் விஜயம் செய்ய வேண்டுமென அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. அண்மையில் குவைட்டில் நடைபெற்று முடிந்த ஆசிய ஒத்துழைப்பு பேச்சுவார்த்தை அமர்வுகளின் போது இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் சல்மன் பின் அப்துல்அசீஸ் அல் சவூட்டை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
ரிசானாவின் விடுதலை தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்த சட்ட மா அதிபரை அனுப்பி வைக்குமாறு சவூதி அரேபிய பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
ரிசானாவின் விடுதலை தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்த சட்ட மா அதிபரை அனுப்பி வைக்குமாறு சவூதி அரேபிய பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment