Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Sunday, November 11, 2012

ஆளும்தரப்பில் 14 முஸ்லிம் உறுப்பினர்கள் இருந்து பள்ளிவாயலை மீட்க முடியவில்லை

கிழக்கு மாகாண சபையின் ஆளுந்தரப்பில் உள்ள இருபத்தியொரு உறுப்பினரில் இருந்தும் திருகோணமலை கரிமலையூற்று பள்ளிவாயலை மீட்க முடியவில்லை என்பது முஸ்லிம் அரசியலின்

பதவிக்காக சோரம் போன அடிமைத்தனத்தையே காட்டுகிறது என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
கல்முனையில் நடைபெற்ற கட்சி ஆதரவாளர்களுடனான சந்திப்பின் போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது

கிழக்கு மாகாண ஆட்சியதிகாரத்தில் முஸ்லிம் உறுப்பினர்களையே அதிகமாகக் கொண்ட கிழக்கு மாகாண சபை, கரிமலைய+ற்று பள்ளிவாயலை மீளப்பெறுவதற்கான தீர்மானத்தை அண்மையில் நிறைவேற்றியிருப்பதை பார்க்கும் போது மிகப்பெரும் அரசியல் கோமாளித்தனம் நிறைவேறியிருப்பதாகவே தெரிகிறது.

இந்த சபையில் இருக்கும் உறுப்பினர்களில் ஏழு பேர் அமைச்சர் ரஊப் ஹக்கீமின் கட்சியினர். மூவர் அமைச்சர் அதாவுள்ளாவின் கட்சியினர். மேலும் மூவர் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் கட்சியினர். ஒருவர் ஜனாதிபதியின் கட்சியை சேர்ந்தவர். அப்படியிருந்தும் அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்டுள்ள பள்ளிவாயலை மீட்க அரசுக்கு முட்டுக்கொடுக்கும், அரசின் அமைச்சர்களாக பவனி வரும் பங்காளிக்கட்சிகளால் முடியவில்லை என்றால் இதனை விட பதவிக்காய் சோரம் போன அரசியல் உலகில் இருக்க முடியாது. இத்தனைக்கும் முஸ்லிம் ஒருவர் முதலமைச்சர், மூன்று பேர் அமைச்சர்கள். இருவர் உரிமைக்குரல் பேசி பதவிக்கு வந்தவர்கள்.

கடந்த தேர்தல் காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வருடன் இணைந்து ஒரு வாரத்தில் இப்பள்ளியை மீட்டுத்தருவேன் என இன்றைய முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார். அதே போல் பள்ளிவாயல்களை காப்பாற்ற தமக்கு வாக்களிக்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மக்களை ஏமாற்றியது. அதே போல் அரசுடன் ஒட்டியிருந்தால்தான் இவைகளை மீட்க முடியும் என அதாவுள்ளாவும், ரிசாதும் தம்பாட்டுக்கு ஏமாற்றினர்.

இத்தகைய ஏமாற்றுக்களுக்கு மயங்கி தமது அறிவை இவர்களிடம்; அடமானம் வைத்த முஸ்லிம் சமூகம் இப்போது மௌனமாய் அழுது கொண்டிருக்கிறது. மாகாண சபை அமைக்கப்பட்டு இரண்டு மாதம் கடந்தும் ஆளுந்தரப்பாக இருந்து கொண்டே பள்ளிவாயலை மீட்க வக்கில்லாமல் எதிர்க்கட்சி போன்று இவர்கள் தீர்மானம் நிறைவேற்றியள்ளார்கள். இதைவிட தாங்கள் அரசியல் பதவிக்காய் சோரம் போன அரசியல்வாதிகள் என தீர்மானம் நிறைவேற்றியிருந்தால் நிச்சயம் பொருத்தமானதாக இருந்திருக்கும்.

No comments:

Post a Comment