அரசின் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது இன்னும் தீர்மானிக்கப் படவில்லை. ஒரு தனிநபரை சொல்லி பிரசாரம் செய்து வாக்குகளை பெரும் முயற்சியில் அரசாங்கம் இறங்கும் என்று நான் கருதவில்லை என பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத் lankamuslim.org க்கு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவித்த தகவலில், எந்த கட்சி கூடிய உறுப்பினர்களை பெறுமோ அந்த கட்சிக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்ற உடன்பாட்டுக்கு அரசு வர வாய்ப்பு உள்ளது. ஒரு அரசியல் உடன்பாடு அப்படிதான் வரமுடியும். ஒரு தனிநபரை குறித்து அவர் முதலமைச்சர் என்று கூறுவதற்கு அது நானாக இருந்தாலும் அரசியல் ரீதியில் அதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால் அரசாங்கம் சில வேளைகளில் வாக்குகள் அதிகமாக எடுக்கும் நபர் முதலமைச்சர் என்று கூறமுடியும் என்று தெரிவித்தார் .
பிரதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத்திடம் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் யார்? அலி சாகிர் மௌலானாதான் அரசாங்கத்தின் முதலமைச்சர் வேட்பாளர் என்று ஒரு அமைச்சர் தெரிவித்ததாக வெளியான தகவல் தொடர்பில் அவரிடம் வினவியபோதே அவர் மேற்கண்ட வாறு தெரிவித்தார் .
(16 .06 .2012 ) ஏறாவூரில் நடந்த ஒரு நிகழ்வில் “ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளரும் விளையாட்டுத் துறை அமைச்சருமான மகிந்தானந்த அளுத்கம அலி சாகிர் மௌலானா கிழக்கின் முதலமைச்சராக வருவார்; முதலமைச்சராக வரப் போகும் அவருக்கு ஆதரவளிக்கவே எங்களை ஜனாதிபதி மட்டக்களப்புக்கு அனுப்பி வைத்தார்” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment