இன்று நாடு முழுவதும் இடம்பெறும் குற்றச்செயல்கள் பலவற்றால் பிள்ளைகளுக்கு வீதியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கே பகிரங்கமாக சொல்லக்கூடிய அளவிற்கு நிலைமை மாறியுள்ளதென ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர், பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக இவ்வாறு குறிப்பிட்டார்.
அரசுடன் தொடர்புடைய மதம் பிடித்த சில பிரதேச அரசியல்வாதிகள் பூ போன்ற பிள்ளைகளை அண்மையில் பலிகடாவாக்கிய சம்பவங்களை பார்க்கும் போது நாட்டின் நிலை வெளிப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அக்குரஸ்ஸ மற்றும் தங்காலை பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்கள் அதற்கு உதாரணம் எனவும் குற்றத்துடன் தொடர்புடையவர்கள் அரசுடன் இணைந்துள்ளவர்களே என கயந்த கருணாதிலக குறிப்பிட்டுள்ளார்.
மக்களை படுகுழியில் தள்ளியுள்ள இந்த அரசு நிதி இல்லை என்று கூறிக் கொண்டு கோடிக்கணக்கில் நிதி கொள்ளையில் ஈடுபடவென உரிய காலத்திற்கு முன்னர் மாகாண சபை தேர்தலை நடத்தவுள்ளதாக அவர் கூறினார்.
இவ்வாறு மக்கள் பணத்தை வீணடிக்கும் அரசின் ஆயுள் காலம் குறித்து இன்று பிரச்சினை ஏற்பட்டுள்ளதென கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
(அத தெரண - தமிழ்)

No comments:
Post a Comment