(ஏ.எல்.ஜனுவர்)
கிழக்கு மாகாணத்தில் இன்று தேசிய காங்கிரஸின் வாக்கு வங்கு வீதம் அதிகரித்துள்ளது. என தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும் கிராமிய மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
எதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்தலை முன்னிட்டு அட்டாளைச்சேனை தேசிய காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்களுடனான ஒன்று கூடல் அட்டாளைச்சேனை லொயிட்ஸ் கூட்ட மண்டபத்தில் அன்மையில் நடைபெற்றது. இங்கு தலைமை வகித்து உரையாற்றும்போதே முன்னால் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் உரையாற்றுகையில் தேசிய காங்கிரஸின் தலமைத்துவத்தின் சரியான வழிநடத்தலின் கீழ் சமூகத்திற்கான அபிவிருத்திகள் சிறந்த முறையில் திட்டமிடப்பட்டு செய்து முடித்தும், செய்துகொண்டும் வருகின்றோம். கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற மூவின மக்களின் நல்லுறவுக்காக தேசிய காங்கிரஸ் அரும்பணியாற்றி வருகின்றது. பிரதேச வேறுபாடு, இன வேறுபாடு, பதவிநிலை வேறுபாடின்றி சேவையாற்றிக் கொண்டிருக்கின்றோம்.
தேர்தல் காலங்களில் மாத்திரம் வந்து வாக்குகளை சூறையாடிக் கொண்டு செல்கின்ற கட்சியல்ல தேசிய காங்கிரஸ். அபிவிருத்தியிலும், உரிமைகளை பெறுவதிலும் கவனமாக செயல்படுவதுடன் தேர்தல் இல்லாத காலங்களிலும் மக்களுடனேயே ஒன்றினைந்து செயல்பட்டு வருகின்றோம்.
மக்களுக்காக எச்சந்தர்ப்பத்தில் எவ்வாறான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்று தீர்க்கதரிசனமாக சிந்தித்து செயல்படுகின்ற தேசிய காங்கிரஸின் தலமையை கிழக்கு மக்கள் என்றும் மறந்துவிடக்கூடாது.
இதனை நன்கு அறிந்த கிழக்கு மாகாண மக்கள் இன்று தேசிய காங்கிரஸின் பக்கம் வந்து கட்சியையும், கட்சியின் தலமைத்துவத்தையும், கட்சியின் கொள்கைகளையும் பலப்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்று தனது உரையில் முன்னால் அமைச்சர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment