வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் இலங்கை பணியாளர்களுக்கு விசேட பயிற்சி வழங்கும் நோக்கில் மாவட்ட ரீதியில் பயிற்சி வள மத்திய நிலையங்களை அமைக்க வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நலன்பேணல் அமைச்சு தீர்மானித்துள்ளது.
வருடத்தில் 265,000 பேர் வெளிநாட்டு வேலைக்காக செல்வதோடு அதில் 113,000 பேர் வீட்டு வேலைக்குச் செல்கின்றனர்.
இவர்களுக்கு வெளிநாட்டில் சென்று வீடுகளில் பணிபுரியும் விதம் மற்றும் மொழி குறித்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இவ்வாறான மத்திய நிலையமொன்று தங்காலையில் தற்போது அமைக்கப்பட்டு வரும் நிலையில் இரத்தினபுரியில் அடுத்த மத்திய நிலையம் அமைக்கப்படவுள்ளது.
200 பெண்கள் தங்கியிருந்து பயிற்சி பெறும் வசதிகளுடன் இந்த பயிற்சி வள மத்திய நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(அத தெரண - தமிழ்)

No comments:
Post a Comment