தகவல் ஊடகத்துறை அமைச்சில் பதிவு செய்யப்படும் செய்தி இணையங்கள் வருடாந்திர புதுப்பித்தல் கட்டணங்களை செலுத்தக் கூடியவாறு சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (12) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பதிவு செய்யப்படும் புதிய செய்தி இணையங்கள் 100,000 ரூபா பதிவுக் கட்டணமும் வருடாந்திர புதுப்பித்தல் கட்டணமாக 50,000 ரூபாவும் செலுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
1973ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஊடக கட்டுப்பாட்டு சட்டத்தின் கிழ் இத்திருத்தம் செய்யப்படவுள்ளது.
சில செய்தி இணையங்கள் குப்பை செய்திகளை வெளியிடுவதால் இச்சட்டம் தேவைப்படுவதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment