Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Thursday, July 12, 2012

மூன்று மாகாண சபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று ஆரம்பம்

கலைக்கப்பட்ட கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபை தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் இன்னு 12ம் திகதி முதல் எதிர்வரும் 19ம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. 

இத்தேர்தலில் போட்டியிடும் சுயேற்டைக் குழுக்கள் தங்களது கட்டுப்பணத்தை எதிர்வரும் 14ம் திகதி நண்பகல் 12 மணி வரை செலுத்தலாம். 

தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 19ம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படுமென தெரிவித்த தேர்தல்கள் ஆணையாளர் 3 ஆயிரத்து 247 வாக்கு சாவடிகள் தேர்தலுக்காக அமைக்கப்படவுள்ளதாவும் அத்துடன் வாக்கெண்ணும் பணிகளுக்காக 236 மத்திய நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

வாக்கு சாவடிக்கு 10 அரச ஊழியர்கள் என்ற ரீதியில் 32 ஆயிரத்து 470 பேரும் வாக்கெண்ணும் மத்திய நிலையங்களுக்கு தலா 40 அதிகாரிகள் வீதமும் மொத்தம் 9 ஆயிரத்து 442 பேர் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

தாக்கல் செய்யப்படும் வேட்பு மனுவுடன் இம்முறை அதன் பிரதியொன்றும் சமர்ப்பிக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது எனவும் இவ்வாறு பிரதியொன்று இணைக்கப்படாத வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படுமெனவும் தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் உரிய நபரின் மூலம் வேட்பு மனுக்கள் ஒப்படைக்கப்படாமை குறிப்பிட்ட கால எல்லைக்குள் வேட்பு மனுவை ஒப்படைக்காமை உரிய வகையில் கட்டுப்பணத்தை செலுத்தாமை போன்ற காரணங்களினால் பெரும்பாலான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படுகின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

மேலும் வேட்பாளரின் எழுத்து மூலமான சம்மதம் இல்லாமை அனைத்து வேட்பாளர்களின் சத்தியக்கடதாசி இணைக்கப்படாமை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றின் செயலாளர் அல்லது சுயேட்சைக்குழுவின் தலைவர் வேட்பு மனுவில் கைச்சாத்திடாமை மற்றும் கையொப்பம் சமாதான நீதவான் ஒருவரினால் உறுதிப்படுத்தப்படாமை போன்ற விடயங்கள் கடந்த கால தேர்தல்களில் இடம்பெற்றதாகவும் இதனால் ஏராளமான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசபிரிய மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 

No comments:

Post a Comment