(MF.RIFAS)
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் முஸ்லிம் கட்சிகளுக்கான வேட்பாளர் பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளது.இதன் பிரகாரம் அரசின் நல்லிணக்கத்துடன் எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் தனது மரம் சின்னத்தில் தனித்து போட்டியிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கட்சியின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
அரச தரப்புடன் நடத்தப்பட்ட இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட உடன்பாட்டின் பிரகாரம் அரசின் சினேகபூர்வமான நல்லிணக்கத்துடனேயே எமது கட்சி தனித்து போட்டியிடுவதற்கான தீர்மானத்தை மேற்கொண்டதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் குறிப்பிட்டார்.

முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்து உரிமை கேட்கும் ரஊப் ஹக்கீமை ஆதரிப்போம்
ReplyDelete