பேரினவாதிகளின் அசூரக்கால் ஐந்தாவது தடவையாக மீண்டும்எமது பூர்வீகமான சமய ஸ்தலத்தி்ல் கை வைக்கப்பட்டுள்ளதைவண்மையாக“ மாஸ்“ அமைப்பு கண்டிக்கிறது.
இவ்வமைப்பின் தலைவரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியபொருளாளருமான கே.எம்.அப்துல் றஸ்ஸாக்(ஜவாத்) மேலும்கூறுகையில்.................... .........
குருணாகல் வெல்லவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெதுரு ஓயாகம எனும் ஊரில் அமைந்துள்ள சுமார் 40வருடம் பழமை வாய்ந்த அல் அக்ரம் பள்ளிவாசலுக்குள் மகரிப் தொழுகை நேரத்தில் சுமார் 150 பேருடன்சென்று சமய ஸ்தலங்களினதும், மனிதத்தின் நேயத்தையும் தெளிவாக எடுத்து இயம்புகின்ற பௌத்தமதத்தின் பிக்கு ஒருவர் பிரித் ஓதி இஸ்லாமிய தொழுகை நடவடிக்கைகளுக்கு காட்டுமிராண்டித்தனமானமுறையில் பள்ளிவாசலின் சமய நிகழ்வுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தியமை மன்னிக்க முடியாதகுற்றமாகும்.இவ்வமைப்பின் தலைவரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியபொருளாளருமான கே.எம்.அப்துல் றஸ்ஸாக்(ஜவாத்) மேலும்கூறுகையில்....................
இலங்கையின் வரலாற்று பதிவுகளை மீண்டும் ஒரு முறை புரட்டிப்பார்க்க வேண்டும் எ்ன்றுஇவர்களுக்கும், இவர்களையும் சார்ந்த அரசியல் அதிகாரமுடையவர்களையும் வேண்டிக் கொள்கிறேன்.அவற்றில் முஸ்லிம்கள் இந்த நாட்டின் ஆட்சியாளா்களுக்கு உதவி ஒத்தாசை செய்வோர்களாகவேஇருந்திருக்கிறார்களே அன்றி ஆட்சி கௌப்புகளுக்கும், அராஜகத்திற்கும் என்றும் துணை நின்றதாகவரலாற்றுப் பதிவுகள் இல்லை.
ஆனாலும் எங்கு முஸ்லிம்கள் மீதான காட்டுமிராண்டித்தனம் கட்டவிழ்த்து விடப்படுகின்றதோ அங்குஇறைவனின் நீதி இறக்கப்பட்டு இப்படியான காட்டுமிராண்டித்தனத்தை தூக்கிப் பிடித்தவர்கள்சின்னாபின்னப் படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நாட்டில் பயங்கரவாதம் ஒன்று தலை தூக்கி வடக்கிலும், கிழக்கிலும் உள்ளவர்கள் மாத்திரம் நிம்மதிஇழக்கவில்லை.மாறாக தெற்கின் முடிவில் உள்ள சிறார்கள் கூட நிம்மதியை இழந்தனர். இதனை எமதுஜனாதிபதி மாண்புமிகு மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இல்லாது ஒழிக்கப்பட்டது.
இதில் முக்கிய விடயம் என்னவன்றால் முஸ்லிம்கள் இந்த பயங்கரவாதசெயலுக்கு முற்று முழுக்கஎதிராக இருந்தனர்.அதனாலேயே பயங்கரவாத யுத்தம் வெற்றியடைந்தது. மாறாக முஸ்லிம்கள்ஆதரவாளர்களாக இருந்திருப்பார்களேயானால் எச்சூழ் நிலைகள் இந்நாட்டில் இருந்து கொண்டிருக்கும்என்பதை விஷேசமாக பௌத்த பேரினவாத சிந்தனையுடைய பிக்குமார் உணரவேண்டும்.
இன்று தமிழ் மேலாதிக்க பயங்கரவாதம் அழிந்த போதும் அதற்காக நாடு கடந்த போராட்ட உரு ஒன்றுஆரம்பித்துள்ளது. இதில் ஐக்கிய நாடுகள் சபைத்தீர்மாணங்களும், கண்டனங்களுக்கும் எதிராகஇந்நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அவர்களும் எம் சமயத்தலைவர்களும் எப்படிநடந்து கொண்டார்கள் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டி இருக்கிறது.
முஸ்லிம்களின் உணர்வுகள் ஊர், நாடு கடந்து பாயும் வல்லமை கொண்டதாகும். இன்று இந்த நாட்டிற்குபொருளாதார ரீதியிலான மேலான உதவிகளைச் செய்து கொண்டிருக்கும். முஸ்லிம் நாடுகளைசீண்டுகின்ற விடயமாக இப்படியான விவேகமற்ற செயல்கள் அமைந்து விடக் கூடாது.
.jpg)
No comments:
Post a Comment