மன்னார் மாவட்ட நீதிமன்ற கட்டடம் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்திய நபரை நீதிமன்றில் நிறுத்தும் வரை இன்று (31) தமது பணிகளைப் பகிஷ்கரிக்கப் போவதாக வட மாகாண சட்டதரணிகள் தீர்மானித்துள்ளனர்.இதற்கமைய யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா நீதிமன்றங்களில் சட்டத்துறைப் பணிகளை தாங்கள் எதிர்வரும் 2 ஆம் திகதியே ஆரம்பிப்பது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் ரிஷாத் பதியுதீன் செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி நீதிமன்றில் நேரடியாக ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள அதேநேரம், மன்னார் நீதிமற்றுக்கு கல்லெறிந்த நபர் குறித்து முழு நாடும் அறிந்திருந்த போதிலும் பொலிஸார் அவரை இது வரை கைது செய்யவில்லை.
இதேநேரம், வடக்கில் நேற்று (30) நீதிமன்றுக்குச் சென்ற பெரும்பாலானவர்களது வழக்குகள் விசாரணைகள் செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளன.
இதேவேளை, அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தற்போது மதக் கடமையின் நிமித்தம் மக்கா சென்றுள்ளார்.
மன்னார் நீதிமன்றுக்கு கல்லெறிந்து தாக்கியமைக் கண்டித்து வடக்கில் கட்சி, இன, மத வேறுபாடுகளின்றி அனைத்துச் சட்டத்தரணிகளும் இணைந்து மேற்கொள்ளும் எதிர்ப்பை மறுதலிப்பு செய்யாமல் இருப்பது ஜனநாயகத்தை மதிக்கும், சட்டத்தை ஆதரிக்கும் நீதிமன்றத்தின் தனித்தன்மையைப் பேணும் அனைத்து பிரஜைகளினதும் கடமையாகும்.
நன்றி எக்ஸ் தமிழ் நியுஸ்

No comments:
Post a Comment