Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Monday, July 23, 2012

விகாரையில் பாங்கு சொல்லி, நோன்பு திறந்து, தொழுகை நடாத்த பௌத்த தேரர்கள் அழைப்பு

(நல்ல நண்பன்)
கொழும்பில் பிரபல மகாபோதி பௌத்த விகாரையில் முஸ்லீம் அரசியலவாதிகள், புத்திஜீவிகள் ஜம்மியத்துல் உலா சபை மௌலவிமார்களை அழைத்து நோன்பு திறப்பதற்கு பௌத்த தேரர்கள் முஸ்லீம்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

நோன்பு திறப்பின்போது அவ் விகாரையில் அதாண் (பாங்கு) ஒலித்து தொழுகை நடத்துவதற்கும் பௌத்த தேரர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். நோன்பு திறப்பதற்கான சிற்றுண்டிகள் மற்றும் கஞ்சி தயாரித்து வழங்குவதற்கும் தேரர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். இந்நிகழ்வினை நோன்பு நடுப்பகுதியில் நடாத்துவதற்கும் தீர்மாணிக்கப்பட்டுள்ளது.

நோன்புப் பெருநாள் அடுத்த திணத்தில் பிரபல பௌத்த தேரர்களுக்கு கொழும்பில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் பகல் உணவு வழங்குவதற்கு முஸ்லீம்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

மேற்படி அழைப்புக்கள் மாளிகாவத்தையில் உள்ள இஸ்லாமிய நிலையத்தில் நேற்று(21) நடைபெற்ற பௌத்தம் இஸ்லாம் நட்புறவு அமைப்பின் கூட்டத்திலேயே தீர்மாணிக்கப்பட்டது.
இந் நிகழ்வு முன்னாள் அமைச்சர் இவ் அமைப்பின் இணைத் தலைவர் எம்.எச்.முஹம்மத் இணைத்தலைவர் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் வேந்தர் கலாநிதி கம்புறுகமகே தேரர், ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.


இவ் அமைப்பின் இணைச் செயலாளர்கள் சீலா விக்கிரம , சாஹுல் ஹமீத் முகமத் மற்றும் உறுப்பினர்கள் ஐனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, சிரேஸ்ட ஊடகவியலாளர் கலாநிதி எட்வின் ஆரியதாச, பானலகல தேரர் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்திலேயே இத் தீர்மாணம் எடுக்கப்பட்டது.

இப்புதிய அமைப்பின் கொள்கைகள் மற்றும் பௌத்தம் இஸ்லாம் மதங்கள் பற்றிய இலங்கையில் புரிந்துணர்வுகள் மதங்களுக்கிடையே பிரச்சினைகள் நடைபெறாமல் பாதுகாத்தல் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து வைத்தல் போன்ற சட்டதிட்டங்கள் அடங்கிய வரைபு தயாரிக்கப்பட்டது.

இவ்அமைப்பு தம்புல்ல மற்றும் தெஹிவளை பள்ளிவாசல்களில் நடைபெற்ற சம்பவங்களுக்குப் பிறகே உறுவாக்கப்பட்டது. கடந்த மாதாத்தில் 4 சுற்ற வட்ட கூட்டங்கள் முன்னாள் அமைச்சர் எம்.எச்.முகம்மத் தலைமையில் நடைபெற்றுள்ளது.

எதிர்வரும் மாதத்தில் ஐனாதிபதி பிரதமர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோரை சந்தித்து இவ் அமைப்பு பற்றி அவர்களுக்கு விளக்கமளிப்பதாகவும் கூட்டத்தில் தீர்மாணம் எடுக்கப்பட்டது. அத்துடன் இச் அமைப்பின் தீர்மாணங்கள் சட்ட திட்டங்களுகளும் ஐனாதிபதி பிரதமருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இணைச் செயலாளர் சாஹ-ல் ஹமீத் முகம்மத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment