மன்னார் நீதிமன்றத் தாக்குதலைக் கண்டித்து நாட்டில் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.மன்னார் நீதவானுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை மற்றும் மன்னார் நீதிமன்றத்தின் மீதான தாக்குதலைக் கண்டித்து சட்டத்தரணிகளினால் இன்றும் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மன்னார் நீதவானுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை மற்றும் நீதிமன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையை கண்டித்து இன்று புதன்கிழமை கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அமைச்சர் ரிசாத் பதியூதின் மன்னார் நீதவானை தொலைபேசியில் அழைத்து அச்சுறுத்தியதாகவும் அதன் பின்னர் தமது ஆதரவாளர்களை அனுப்பி நீதிமன்றின் மீது தாக்குதல் நடத்தத் தூண்டியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை கண்டித்து சட்டத்தரணிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதுடன் வடக்கு உட்டப நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய அமைச்சர் ரிசாத் பதியூதினை கைது செய்யாமைக்கு கண்டனம் தெரிவித்து இன்றும் சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்றைய தினம் கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் ஒன்றினைந்த சட்டத்தரணிகள், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், ஊர்வலமாகவும் சென்றனர்.

No comments:
Post a Comment