இந்தியாவின் 13-வது குடியரசுத் தலைவராக முன்னாள் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று 25ம் திகதி புதன்கிழமை பதவியேற்றார்.
முன்னதாக இன்று காலை அவர் தனது இல்லத்தில் இருந்து காந்தி சமாதி அமைந்துள்ள ராஜ்காட்டுக்கு சென்றார். அங்கு மரியாதை செலுத்திய பின் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி பதவியேற்றார்.
பதவி விலகிச் செல்லும் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் புதிய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆகியோர் ஜனாதிபதி மாளிகையில் இருந்து பாராளுமன்றக் கட்டடத்துக்கு சம்பிரதாய முறைப்படி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
அவர்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா, துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, சபாநாயகர் மீராகுமார் ஆகியோர் வரவேற்று பாராளுமன்ற மைய மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர்.
சரியாக முற்பகல் 11.30 மணிக்கு பிரணாப் முகர்ஜி புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்றார். அவருக்கு தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
அவர் பதவி ஏற்றுக் கொண்டதும் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்கின. நிகழ்ச்சிகள் முடிந்ததும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும், பிரதீபா பாட்டீலும் ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்துச் செல்லப்படுவர்.
ஜனாதிபதி மாளிகை முன் பிரணாப் முகர்ஜிக்கு முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படும்.
ஜனாதிபதி மாளிகைக்குள் சென்றதும் பிரணாப் முகர்ஜியிடம் விடைபெற்றுக் கொண்டு பிரதீபா பாட்டீல் துக்ளக் சாலையில் உள்ள தனது இல்லத்துக்கு புறப்பட்டுச் செல்கிறார். மரியாதை நிமித்தமாக அவருடன் பிரணாப் முகர்ஜியும் செல்வார்.
பிரதீபா பாட்டீலுக்கு புனே நகரில் பங்களா தயாராகி வருகிறது. அதுவரை டெல்லி பங்களாவில் தங்கி இருப்பார்.
இன்றைய பதவியேற்பு விழாவில் பிரதமர் மன்மோகன்சிங், சபாநாயகர் மீராகுமார், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜக மூத்த தலைவர் அத்வானி, எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், மாநில ஆளுநர்கள் கலந்து கொண்டனர்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று இரவு கொல்கத்தாவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் புறப்பட்டு டெல்லி வந்தார். நேராக டெல்லி தல்கதோரா சாலையில் உள்ள பிரணாப் முகர்ஜி வீட்டுக்கு சென்று அவருக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார்.
புதிய ஜனாதிபதி பதவி ஏற்பு விழாவையொட்டி டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பதவி ஏற்பு நேரத்தின்போது பாராளுமன்றத்துக்கு மேலே விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது. டெல்லி வான் எல்லையும் விமானப்படையால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டது.
விமான எதிர்ப்பு ஏவுகணைகளும், சுகோய்-30, மிக்-21 ரக போர் விமானங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன.

No comments:
Post a Comment