பரக்கத்துள்ளா
கிழக்கு மாகாண சபை தேர்தல் பிரச்சாரப் பணிகளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெள்ளியன்று தெஹியத்தக்கண்டியில் ஆரம்பம் செய்தது. இப்பிரச்சார நடவடிக்கைகளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நீதியமைச்சருமான ரஊப் ஹக்கீம் ஆரம்பித்து வைத்தார்.
இதில் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ், கல்முனை அமைப்பாளரும், அம்பாறை மாவட்ட செயலாளருமான ஏ.எம்.பறக்கத்துல்லாஹ், கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஏ. பஷீர், யடிநுவர பிரதேச சபையின் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் புஷ்பா கொடிதுவக்கு ஆகியோருடன் நீதியமைச்சரின் இணைப்பாளர் மைலால் சில்வா மற்றும் கிராமிய அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
தெஹியத்தக்கண்டி, இஹலகம, மற்றும் மாவனகம ஆகிய பகுதிகளில் பிரச்சாரப் பணிகள் இடம்பெற்றன. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர் டீ.எம். ரணவீர பண்டாரவை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நீதியமைச்சருமான ரஊப் ஹக்கீம் மக்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதை படத்தில் காணலாம்.



No comments:
Post a Comment