முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமான ஏ.எம். ஜெமீல் அவர்களின் இலவச குடிநீர் இணைப்பு வழங்கும் தி்ட்டத்தில் ஒலுவில் பிரதேசத்தை சேர்ந்த 30 குடும்பங்களுக்கான நீர் வினியோகம் வழங்கும் நிகழ்வு கடந்த திங்கள் கிழமை ஒலுவில் பிரதேசத்தில் நடைபெற்றது.
ஏ.எம். ஜெமீல் அங்கு உரையாற்றுகையில்;
இத்திட்டம் மாகாணசபைக்கு தெரிவு செய்யப்பட்ட முதல் நாள் எனது இலக்கு மாகாண சபை காலத்துக்குள் எனது மாவட்டத்தில் 2000 பேருக்கு வழங்குதல். இதுவரை 1500 க்கு மேற்பட்ட இணைப்பக்கள் மாவட்டம் முழுவதும் வழங்கியுள்ளேன்.
ஒலுவில் பிரதேச்தில் இன்றுடன் 75 மேற்பட்ட இணைப்பும் அடுத்து ஒரிரு நாட்களில் பிரதேச சபை உறுப்பினர் நபீல் அவர்களின் வேண்டுதலில் மேலும் 20 இணைப்புகள்ள வழங்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.
இதே போன்று இலவச மின்சார இணைப்பும் 100 மேல் வழங்கப்பட்டுள்ளது. இச்சேவையின் நோக்கம் அரசியல் இலாபம் அல்ல, நான் மரணித்தாலும் இப்பயன் பெற்றவர்கள் இவ்வுலகம் அழியும் வரை பயன்பெறுவதால் அவர்களின் பிரார்த்தனை எனக்கு கிடைக்வேண்டுமென்பதாகும் என மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் நபீல் அமானுள்ளா, மத்திய குழு உறுப்பினர் ஹமீட், மாகாண சபை உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் சீஎம்ஏ. முனாஸ் மற்றும் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:
Post a Comment