அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை அகதிகள் 42 பேரை சென்னையில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
புழல் அருகேயுள்ள ஈஞ்சங்காடு பகுதியில் உள்ள திறந்த வெளி அகதிகள் முகாமில் ஏராளமான இலங்கை அகதிகள் உள்ளனர்
இவர்களில் சிலர் அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல உள்ளதாக கியூ பிரிவு பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கியூ பிரிவு ஆய்வாளர் உத்தமராஜன் தலைமையில் பொலிஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வண்டலூர் அருகே இரண்டு வேன்களை மறித்து சோதனை செய்ததில் அகதிகள் இருந்தது தெரியவந்தது.
வானில் இருந்த 26 ஆண்கள், 15 பெண்கள், 11 குழந்தைகள் என 42 பேரையும் பொலிஸார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வேளாங்கண்ணி சென்று, அங்கிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல இருந்தது தெரியவந்தது.
தமிழகத்தில் வாழ்ந்து வரும் இலங்கை அகதிகளை புதுச்சேரி வழியாக அவுஸ்திரேலியாவிற்கு செல்வதற்கு உதவியதாக 5 தரகர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட அகதிகளிடம் நடத்திய விசாரணையில், இந்திய ரூ. 2 லட்சம் பெற்றுக்கொண்டு தங்களை அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைப்பதாக தரகர்கள் கூறியதன் பேரில் தாங்கள் இங்கு வந்ததாக அவர்கள் கூறினர்.
இந்நிலையில், வண்டலூர் அருகே பொலிஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போது தரகர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறன.
(வெப்துனியா, தினமலர்)

No comments:
Post a Comment