NN
ஆசிய பிராந்தியத்தில் சமாதானத்தின் தலைசிறந்த தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை குறிப்பிட முடியும் என சுவாஸிலாந்து ராஜ்யத்தின் முடிக்குரிய மன்னர் எம். சுவாதி தெரிவித்தார்.
சமாதானத்திற்குத் தடையாகவிருந்த தடைகள், அழுத்தங்களுக்கு வெற்றிகரமாக
முகங்கொடுத்து நல்லிணக்கத்தின் மூலம் இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தியமைக்காக ஜனா
திபதியைப் பாராட்டுவதாகவும் சமன்னர் தெரிவித்தார்.
உலகின் பல்வேறு நாடுகள் முகங்கொடுக்க நேரிட்டுள்ள பொருளாதார பின்னடைவுகள் தொடர்பில் குறிப்பிட்ட சுவாதி மன்னர், இலங்கை அதற்கு சிறந்த வகையில் முகங்கொடுத்துள்ளமை முன்னுதாரணமாகவுள்ளதெனவும் குறிப்பிட்டார்.
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள சுவாஸிலாந்து மன்னரை உத்தியோகபூர்வமாக வரவேற்கும் நிகழ்வு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதனையடுத்து இரு நாட்டுத் தலைவர்களுக்குமிடையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இரு தரப்பு பேச்சுவார்த்தையின் போதே சுவாதி மன்னர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது பேச்சுவார்த்தை மூலம் நாட்டுக்கு நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்டுள்ள முயற்சிகளைப் பாராட்டினார். அதேவேளை தெற்காசிய பிராந்தியத்திற்கான முதலாவது விஜயமாக இலங்கைக்கு வந்தமை தொடர்பில் மகிழ்ச்சியுறுவதாகவும் குறிப்பிட்டார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்; எதிர்காலத்தில் அரசாங்கத்தின் சிறந்த கொள்கைகள் மூலம் நாட்டு மக்களின் நல்வாழ்வுக்கான செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவை வேறு எவருக்கும் அடிபணியாததாகவிருக்கும் எனவும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment