Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Sunday, August 26, 2012

கிழக்கில் முதலமைச்சை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றும் - சம்பந்தன்

கிழக்கு மாகாண முதலமைச்சை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே கைப்பற்றும் எனவே தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் தெரிவித்தார். 

அம்பாறை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களின் ஏற்பாட்டில் ஆலையடிவேம்பு பிரதேச
கலாச்சார மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்ட கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து பேசுகையில், 

இன்றைக்கு தமிழ் பேசும் மக்களுடைய பிரச்சினை சர்வதேச மயமாக்கப்பட்டுள்ளது. இந்த தேசியப் பிரச்சினை சம்மந்தமாக சர்வதேச சமூகம் ஜ.நாடுகள் சபையில் மனித உரிமை ஊடாக சில தீர்மானங்கள் எடுத்துள்ளது. அந்த தீர்மானங்களையடுத்து இலங்கை அரசாங்கம் திணறிக் கொண்டிருக்கும் சூழலில் அதனை முறியடிப்பதற்காக தமிழ் மக்கள் அரசுடன்தான் இருப்பதாக காட்டுவதற்குத்தான் இலங்கை அரசாங்கம் இந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடாத்துகின்றது. 

இதேவேளை யுத்தத்தின் இறுதிக்காலத்தில் மனித உரிமைச் சட்டங்கள் மீறப்பட்டுள்ளதாகவும் அந்த மீறல்கள் சம்மந்தமாக விசாரணை நடைபெற்று பக்கசார்பற்ற நேர்மையான அறிக்கை வெளியிடவேண்டும் என்ற கருத்து வந்திருக்கின்றது. 

இந்த சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டு போர்குற்றங்கள் இழைக்கப்பட்டனவா என்ற கேள்வி மனித நேயத்துக்கு மாறாக போர் இடம்பெற்றனவா என்று பதில் கூறவேண்டிய நிலையில் அரசு சர்வதேச அரங்கில் இருக்கின்றது. 

கடந்த 2009ம் ஆண்டு ஜனாதிபதி கூறினார் 2010 வடமாகாண தேர்தல் நடக்கும் என பின்னர் 2010 கூறினார் 2011 நடக்கும் என பின்னர் 2011 கூறினார் 2012 நடக்கும் என இப்பொழுது 2013 வடக்கு மாகாண தேர்தல் என கூறுகின்றார். ஏன் வைக்கவில்லை அவர்களுக்குத் நன்றாகத் தெரியும் வடக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் தனிப்பெரும்பான்மையாக வாழுகின்றனர். 

தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெறும் அது சர்வதேச சமூகத்துக்கு ஒரு செய்தியனுப்பும் அந்தசெய்தி தமிழ்மக்கள் உரிமையை வழங்கவேண்டும் என்று அதனால் இவற்றை எல்லாம் முறியடிப்பதற்காக கிழக்கில் சிங்களமக்கள் குடியேற்றப்பட்டு இன விகிதாசாரம் மாற்றப்பட்டுள்ளதுடன் முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இருக்கின்றது என நினைத்து ஒருவருடம் இன்னும் கிழக்கு மாகாண சபை இருக்கும்போது அதனை களைத்து தேர்தலை நடாத்துகின்றது. 

ஆனால் முஸ்லிம் மக்களும் முஸ்லிம் தலைமைகளும் அரசு தமிழ் மக்களுக்கு செய்தவைகளை நினைத்து தாங்கள் தமிழ் மக்களுக்கு எதிராக அரசுடன் சேர்ந்து போட்டியிட வேண்டாம் என்ற காரணமாக முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என ஜனாதிபதி எதிர்பார்க்கவில்லை. 

மட்டக்களப்பில் 8 ஆசனங்களையும் அம்பாறையில் 3 ஆசனங்களையும் திருகோணமலையில் 5 ஆசனங்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றும் எனவே முறையாக தமிழ் மக்கள் தமது ஒட்டு மொத்த வாக்களிப்பு வீதத்தை அதிகரிப்பதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு முதலமைச்சை கைப்பற்றும் என்றார். 

No comments:

Post a Comment