Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Friday, August 24, 2012

விமானியின் தனி அறையில் இளம்பெண். சர்ச்சையில் சிக்கிய கிங்பிஷர் தலைமை விமானி !


டெல்லியிலிருந்து மும்பை சென்ற கிங்பிஷர் ஏர்லைன்ஸ் விமானத்தில் காக்பிட் அறையில் எதிர்ப்புகளை மீறி பெண்ணை அமரவைத்து பறந்த விமானியால் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது. விமானிகளின் காக்பிட் அறையில் விமானிகளைத் தவிர வேறு யாரையும் அமர்த்தக் கூடாது என்று விமான ஒழுங்குமுறைகள் ஆணையத்தின் விதி. இந்த விதியை மீறி கிங்பிஷர் நிறுவனத்தின் தலைமை விமானி கடந்த 19-ந் தேதியன்று ஒரு பெண்ணை அழைத்து அமர வைத்து பறந்திருக்கிறார். இது தொடர்பாக
விமான ஒழுங்குமுறைகள் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கிங்பிஷர் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் மிர்புரி, விசாரணைகளை நடத்தி வருகிறோம் என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீதான செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு விமான பயணத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. ஆனால் இதையெல்லாம் காதில் கொள்ளாததால் போல் கிங்பிஷர் நிறுவனத்தின் தலைமை விமானியே செயல்பட்டிருக்கிறார்.
ஏற்கெனவே ஊதிய விவகாரம், கட்டண பாக்கி என பல சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருக்கும்கிங்பிஷர் ஏர்லைன்ஸ் இப்பொழுது இப்படி ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment