Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Friday, August 24, 2012

இலங்கையில் 300 பட்டதாரிகள் சிறைச்சாலைகளில் தடுத்து வைப்பு

2011ஆம் ஆண்டில் பலவிதமான குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சுமார் 300 பட்டதாரிகள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 

நிதி ரீதியான மோசடிகளில் ஈடுபட்டவர்களே பெரும்பாலும் கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் நிமல் கொட்டவெலகெதர தெரிவித்தார். 


இலங்கையில் இருக்கின்ற சிறைச்சாலைகளில் கல்வியறிவற்றவர்களும், பாரிய குற்றங்களை புரிந்தவர்கள் மாத்திரமன்றி, கல்வி கற்றவர்களும், உயர்கல்வித் தரங்களைக் கொண்டவர்களும் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இதுதவிர, சாதாரண சமூக நிலையை கொண்டவர்களைப் போன்றே, மருத்துவர்கள், பொறியியலாளர்கள் போன்ற சமூகத்தில் உயர் நிலைமைகளை வகிப்பவர்களும் தண்டனை அனுபவித்து வருவதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். 

குற்றம் புரிந்தவர்கள் அவர்களின் குற்றத்தின் தன்மைக்கேற்ப சிறைச்சாலை சூழலில் தண்டனை அனுபவிப்பதாகவும், அவர்கள் உயர் கல்வி கற்றவர்கள், மற்றும் கல்லாதவர்கள் என்ற பாகுபாடு காட்டப்படவில்லை என்றம் அவர் தெரிவித்தார். 

சிறைச்சாலையினுள் தமக்கு தேவையான கல்வியை பெற விரும்புபவர்களுக்கும் அதற்கான ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்படும். 

வாழ்க்கையில் ஏனைய செயற்பாடுகளை மேற்கொள்வற்கு சிறைச்சாலை ஒரு தடையாக இருக்காது என்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் நிமல் கொட்டவெலகெதர சுட்டிக்காட்டியுள்ளார். 

No comments:

Post a Comment