காலி – கிங்தொட – கறுவாத்தோட்டம் பிரதேசத்தில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் காரணமாக வர்த்தக நிலையம் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
இருதரப்புக்கு இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக குறித்த நிலையத்திற்கு தீவைக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
85 லட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் இதன்போது சேதமடைந்தாக கணக்கிடப்பட்டுள்ளது.
கிங்தொட பிரதேசத்தில் கடந்த சில தினங்களாகவே இருதரப்புக்கும் இடையில் கருத்து முறுகல் இருந்து வந்ததாக தேசிய ஐக்கியத்திற்கான சர்வமதங்கள் கூட்டமைப்பின் இணைத்தலைவர் அல்ஹாஜ் ஹசன் மௌலான  தெரிவித்தார்.. 
சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கிங்தொட்ட பிரதேசத்தில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் றோஹன தெரிவித்துள்ளார்
 
 
 
 
 
No comments:
Post a Comment