(ஏ.எல்.ஜனுவர்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் யாப்பு அல்-குர்ஆனும், அல்-ஹதீசுமாகும்.
மறைந்த மாபெரும் தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரஃப் அவர்கள் இதற்கமைவாக மரணிக்கும் வரைக்கும் தன்னையும், கட்சியையும் பேணிவந்தார். ஆனால் தலைவரின் மரணித்தின் பின்னர் வந்த அதன் தற்போதைய தலைவர் றஊப் ஹக்கீம் அவர்களோ பொய்யும், புரட்டும், பித்தலாட்டமுமாக நடந்து கொள்கின்றார். இதனை ஏனைய சமூகங்கள் ஏழனமாகப்பாக்கின்றமை நமது சமூகத்திற்கு கிடைக்கின்ற .....
கடந்த 22.08.2012ம் திகதி அட்டாளைச்சேனை பிரதான வீதியில் நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் உரையாற்றும் போது முன்னாள் அமைச்சரும் நடைபெறவுள்ள மாகாண சபைத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் 13 ஆம் இலக்க வேட்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை இவ்வாறு தெரிவித்தார். 
அவர் தொடர்ந்தும் அவர் பேசுகையில் றஊப் ஹக்கீம் அவர்கள் இப்தார் எனும் பேரில் அரசியலுக்காக அதனைப் பயன்படுத்தி அக்கரைப்பற்று வருகை தருவதாக தனது ஆதரவாளர்களுக்கு அறிவித்துவிட்டு அட்டாளைச்சேனைக்கு வருவார். 2009 திலும் இது நடைபெற்றது. இந்த வருடமும் இது நடைபெற்றது. அவருக்கு நன்கு தெரியும் தன்னால் அக்கரைப்பற்றுக்கு செல்ல முடியாது அதற்கு அந்த மக்கள் அனுமதிக்கவும் மாட்டார்கள் இருந்தும் இவ்வாறு வந்து தன்னோடு வந்த ஆதரவாளர்களுடன் அட்டாளைச்சேனை பிரதேச ஆதரவாளர்களையும் இணைத்து பிரதான வீதியினூடாக ஊர்வலமாக வந்து தேசிய காங்கிரஸின் கட்சிக்காரியாலயங்கள், அதன் ஆதரவாளர்களின் வீடுகள், உடமைகள் என்பனவற்றையெல்லாம் சேதப்படுத்தி செல்வதோடு பொலிஸ், நீதிமன்றம் என்பவற்றுக்கு தனது ஆதரவாளர்களை அலயவைப்பார். இதனை நாங்கள் பகிரங்கமாகவே நாங்கள் கண்கூடாக காண்கின்றோம்.
கடந்த 13ம் திகதி என்ன நடைபெற்றது 2009ம் ஆண்டு பாணியிலே அக்கரைப்பற்று இப்தார் நிகழ்வு எனும் போர்வையில் அட்டாளைச்சேனைக்கு வந்து பெரிய பள்ளிவாயலின் முன்றலில் ஒன்று சேர்ந்தனர் அதன் பின்னர். அட்டாளைச்சேனை ரீபி ஜாயா வித்தியாலயத்தின் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்ற கட்டிடத்தின் பெயர் பலகை உடைத்து பாதையில் இழுத்துச் சென்றதுடன் எமது காரியாலயங்கள், வாகணங்கள், உடமைகள் என்பவற்றை உடைத்து தீயிட்டார்கள்
இதனை மாவட்டத்தின் மக்கள் தனது கண்களால் பார்த்து நின்றனர். இது பகிரங்கமாக நடந்த சம்பவமாகும்.
மறுநாள் சாய்ந்தமருதுவில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டிலும் பீ.பீ.சியின் தமிழ் ஒலிபரப்பிலும் இந்த சம்பவம் பற்றி குறிப்பிட்ட றஊப் ஹக்கீம் அவர்கள் தேசிய காங்கிரஸின் ஆதரவாளர்கள் தான் இந்தவேலைகளைச் செய்து விட்டு தமது தன்மீதும் தனது ஆதரவாளர்கள் மீது குற்றம் சுமத்துவதாக நாவுகூசாது பொய்யைக் கூறுகின்றார். இது ஒரு தலைவருக்குரிய பன்பாகுமா?
இதேபோன்றுதான் அம்பாரை மாவட்டத்திற்கு வந்து வெற்றிலைக்கு வாக்களிக்ககூடாது வெற்றிலைக்கு வாக்காளிப்பது பள்ளிவாசல் உடைக்கப்படுவதற்கு சம்மதம் தெரிவிப்பதாகவும் என கூறிவிட்டு அதே தினம் பொலநறுவை, அனுராதபுர மாவட்டங்களுக்குச் சென்று வெற்றிலைக்கு வாக்களித்து அரசாங்கத்தைப் பலப்படுத்துங்கள் என்று கூறுகின்றார். காவி உடை தரித்த பயங்கரவாதம் என்று கூறிவிட்டு மறுநாள் பகிரங்கமாகவே மண்ணிப்பு கோருகின்றார். இது அல்-குர்ஆன், அல்-ஹதீஸ் யாப்பாகக் கொண்ட கட்சியின் தலைவரின் இலட்சனமா? அல்லது சமூகத்திற்கான அவமானச் சின்னமா? இவற்றை இறைவன் மண்ணிப்பானா என்றும் கூறினர்.
 
 
 
 
 
No comments:
Post a Comment