Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Saturday, August 25, 2012

சூடான டீயை ஆவி பறக்க அவசரமாய் குடிப்பவர்களா நீங்கள்?

சூடான டீயை ஆவி பறக்க அவசரமாய் குடிப்பவர்களா நீங்கள்? கொஞ்சம் சூடு குறைந்தாலும் நீங்கள் ரொம்ப சூடாகி விடுவீர்களா? அப்படியென்றால் நீங்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய சூடான செய்திதான் இது. கொஞ்சம் ஆற அமர படியுங்கள்.

அதிக சூடாக டீ குடிப்பவர்களுக்கு உணவுக்குழாய் புற்றுநோய் ட்ர(Oesophagus cancer) வருவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக மருத்துவ ஆய்வில் நிபுணர்கள்
கண்டறிந்துள்ளனர். புற்றுநோயின் பல்வேறு வகைகளில்

ஒன்று உணவுக்குழாய் புற்றுநோயாகும். இந்நோயால் உலகில் ஆண்டுக்கு 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இறக்கின்றனர். மும்பையிலுள்ள டாடா நினைவு மருத்துவனை நிபுணர்கள் 1500 பேரிடம் மேற்கொண்ட ஆய்வில் பின்வரும் தகவல்கள் அறியப்பட்டன.

வாய் முதல் இரப்பை வரையுள்ள உணவுக்குழாய் மிக மிருதுவானது. அதிக சூடாக டீ குடிப்பதால் உணவுக்கழாயின் சுவர்கள் அரிக்கப்பட்டு திசுக்கள் பலவீனமாகின்றன. இதனால் கேன்சர் கட்டி ஏற்படும் அபாயமுள்ளது.

பான்பராக், புகையிலை போடுபவர்களுக்கு 1.1 மடங்கும் பீடி குடிப்பவர்களுக்கு 1.8 மடங்கும் சிகரெட் பிடிப்போருக்கு 2 மடங்கும் மது அருந்துவோருக்கு 1.8 மடங்கும் கேன்சர் வரும் வாய்ப்புள்ளது. இவற்றையெல்லாம் விட சூடாக டீ குடிப்போருக்கு 4 மடங்கு அதிகமாக வாய்ப்புள்ளதாம்.

உலகின் வேறு சில நாடுகளிலும் இதே போன்ற ஆய்வுகள் நடத்தப்பட்டு இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவிலிருந்து வெளிவரும் கேன்சர் ஆராய்ச்சி இதழான International cancer epidoliogy ல் இந்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது

No comments:

Post a Comment